தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் 
தற்போதைய செய்திகள்

நீட்டை ஒழித்துக்கட்டும் நாள் வெகுதொலைவில் இல்லை: முதல்வர் மு.க.ஸ்டாலின்

நீட் எனும் பிணியை அழித்தொழிக்கக் கரம்கோப்போம். நீட்டை ஒழித்துக்கட்டும் நாள் வெகுதொலைவில் இல்லை என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

DIN

நீட் எனும் பிணியை அழித்தொழிக்கக் கரம்கோப்போம். நீட்டை ஒழித்துக்கட்டும் நாள் வெகுதொலைவில் இல்லை என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

நீட் தேர்வினை ரத்து செய்திட வேண்டுமென்று வலியுறுத்தி அவர் எக்ஸ் வலைதள பக்கத்தில் தெரிவித்திருப்பதாவது:

சமீபத்திய நீட் தேர்வு முடிவுகள் தொடர்பாக வெளிவரும் செய்திகள் அத்தேர்வுக்கு எதிரான நமது கொள்கை நிலைப்பாடு நியாயமானது என்பதை உறுதிப்படுத்துகின்றன.

வினாத்தாள் கசிவுகள், குறிப்பிட்ட மையங்களில் இருந்து மொத்தமாக அதிக மதிப்பெண் பெறும் மாணவர்கள், கருணை மதிப்பெண்கள் என்ற போர்வையில் நடைமுறைக்குச் சாத்தியமற்ற அளவில் மதிப்பெண்களை அள்ளி வழங்குவது போன்ற குழப்பங்கள் தற்போதைய மத்திய அரசின் அதிகாரக்குவிப்பின் குறைபாடுகளை வெட்டவெளிச்சமாக்குகின்றன.

இவை, தொழிற்படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை நடைமுறையைத் தீர்மானிப்பதில் மாநில அரசுகள் மற்றும் பள்ளிக் கல்வி முறை மீண்டும் முதன்மை பெற வேண்டியதன் அவசியத்தை உணர்த்துகின்றன.

மீண்டும் ஒருமுறை அழுத்தந்திருத்தமாகச் சொல்கிறோம்:

* நீட் மற்றும் பிற தேசிய நுழைவுத் தேர்வுகள் ஏழை மாணவர்களுக்கு எதிரானவை.

* அவை கூட்டாட்சியியலை சிறுமைப்படுத்துபவை.

* சமூகநீதிக்கு எதிரானவை.

* தேவையுள்ள இடங்களில் மருத்துவர்களின் இருப்பை பாதிப்பவை.

நீட் எனும் பிணியை அழித்தொழிக்கக் கரம்கோப்போம்! நீட்டை ஒழித்துக்கட்டும் நாள் வெகுதொலைவில் இல்லை! என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பருத்தி மீதான 11% இறக்குமதி வரி ரத்து! மத்திய அரசு

கரையைக் கடந்த புயல் சின்னம்!

பயணிகள் விமானத்தில் தீ! 36,000 அடி, 40 நிமிட பயணம்! பத்திரமாக தரையிறக்கியது எப்படி?

தெய்வ தரிசனம்... காணாமல் போன பொருள் கிடைக்க திருமுருகபூண்டி திருமுருகநாதஸ்வாமி!

தே.ஜ. கூட்டணி எம்பிக்கள் கூட்டம்: பிரதமர் மோடி, சி.பி. ராதாகிருஷ்ணன் பங்கேற்பு!

SCROLL FOR NEXT