தற்போதைய செய்திகள்

ஒரே நாளில் அதிரடியாக குறைந்த தங்கம் விலை: எவ்வளவு தெரியுமா?

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சனிக்கிழை பவுனுக்கு ரூ.1520 குறைந்து ரூ.53,200-க்கும் விற்பனையாகிறது.

DIN

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சனிக்கிழை பவுனுக்கு ரூ.1520 குறைந்து ரூ.53,200-க்கும் விற்பனையாகிறது.

தங்கம் விலை கடந்த சில நாள்களாக ஏற்ற இறக்கங்களைச் சந்தித்து வந்தது. கடந்த புதன்கிழமை தங்கம் பவுனுக்கு ரூ.160 குறைந்து ரூ.53,800-க்கு விற்பனையானது. வியாழக்கிழமை பவுனுக்கு ரூ.600 உயர்ந்து ரூ.54,400-க்கு விற்பனையானது. வெள்ளிக்கிழமை பவுனுக்கு ரூ.320 உயர்ந்து ரூ.54,720-க்கு விற்பனையானது.

இந்த நிலையில், ஒரே நாளில் அதிரடியாக சனிக்கிழமை பவுனுக்கு ரூ.1,520 குறைந்து ரூ.53,200-க்கும், கிராமுக்கு ரூ.190 குறைந்து ரூ.6,650-க்கும் விற்பனையாகிறது.

இதேபோல், வெள்ளியின் விலையும் ஒரே நாளில் அதிரடியாக சனிக்கிழமை கிராமுக்கு ரூ.4.50 உயா்ந்து ரூ.96-க்கும், கட்டி வெள்ளி (ஒரு கிலோ) ரூ. 4,500 குறைந்து ரூ. 96,000-க்கும் விற்பனையாகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

புயல், பருவ மழையால் சேதமடைந்த சாலைகள்: ரூ.1,503 கோடியில் சீரமைக்க முதல்வா் அனுமதி

மதுரமங்கலம் வைகுண்ட பெருமாள், எம்பாா் சுவாமி கோயில் கும்பாபிஷேகம்

கோயிலில் பக்தா்களுக்கு அன்னதானம்

பிரதமா் வருகையையொட்டி இன்று போக்குவரத்து மாற்றம்: செங்கல்பட்டு மாவட்ட காவல் துறை அறிவிப்பு

‘நலம் காக்கும் ஸ்டாலின்’ மருத்துவ முகாம்கள்: 30 ஆயிரம் போ் பயன்

SCROLL FOR NEXT