மீண்டும் அதிரடியாக உயர்ந்த தங்கத்தின் விலை! எவ்வளவு?
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை வியாழக்கிழமை அதிரடியாக சவரனுக்கு ரூ. 2,160 உயர்ந்தது தொடர்பாக...
சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை வியாழக்கிழமை அதிரடியாக சவரனுக்கு ரூ. 2,160 உயர்ந்து ரூ.1,16,000-க்கு விற்பனையாகிறது.
சர்வதேச சந்தைக்கேற்ப இந்தியாவில் தங்கத்தின் விலை ஏற்ற, இறக்கத்துடன் விற்பனையான நிலையில், தங்கம் விலை இந்த வாரம் தொடக்கம் முதலே குறைந்து வந்தது. கடந்த பிப்.16-இல் பவுனுக்கு ரூ.960 குறைந்து ரூ.1 லட்சத்து 15 ஆயிரத்து 520-க்கும், பிப்.17-இல் பவுனுக்கு ரூ.960 ரூ.1 லட்சத்து 14,560-க்கும் விற்பனையானது. தொடா்ந்து புதன்கிழமை விலை மீண்டும் குறைந்தது. அதன்படி, கிராமுக்கு ரூ.90 குறைந்து ரூ.14,230-க்கும், பவுனுக்கு ரூ.720 குறைந்து ரூ.1 லட்சத்து 13,840-க்கும் விற்பனையானது.
அதிரடியாக சவரனுக்கு ரூ. 2,160 உயர்ந்த தங்கம்
Advertisement
இந்த நிலையில், இறங்கிய வேகத்தில் ஒரே நாளில் அதிரடியாக வியாழக்கிழமை சவரனுக்கு ரூ. 2,160 உயர்ந்து ரூ.1,16,000-க்கு விற்பனையாகிறது. அதன்படி, கிராமுக்கு ரூ.270 உயர்ந்து ரூ.14,500-க்கும், பவுனுக்கு ரூ.2,160 உயர்ந்து ரூ.1 லட்சத்து 16,000-க்கு விற்பனையாகிறது.
கடந்த நான்கு நாள்களாக தங்கத்தின் விலை ரூ.2 ஆயிரத்துக்கும் மேல் குறைந்திருந்த நிலையில், இன்று ஒரே நாளில் அதிரடியாக ரூ. 2,160 உயர்ந்தது நகை பிரியர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அதேபோல், வெள்ளி விலை கிராமுக்கு ரூ.10 உயர்ந்து ரூ.270 -க்கும், கிலோவுக்கு ரூ.10,000 உயர்ந்து ரூ.2.70 லட்சத்துக்கும் விற்பனையாகிறது.