தங்கம், வெள்ளி விலை உயர்வு! இன்றைய நிலவரம் (ஆக. 11)
இன்றைய தங்கம், வெள்ளி நிலவரம் தொடர்பாக....
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று(ஆக. 11) அதிரடியாக சவரனுக்கு ரூ. 2,400 உயர்ந்துள்ளது.
தங்கத்தின் விலை வெள்ளிக்கிழமை கிராமுக்கு ரூ.150 உயர்ந்து, ரூ.13,900-க்கும், சவரன் ரூ.1,200 உயர்ந்து, ரூ. 1,11,200-க்கு விற்பனையானது. தொடர்ந்து, சனிக்கிழமை தங்கம் விலை கிராமுக்கு ரூ. 65 உயர்ந்து, ரூ.13,965-க்கும், சவரன் ரூ.520 உயர்ந்து, ரூ.1,11,720-க்கு விற்பனையானது.
தங்கத்தின் விலை தொடர்ச்சியாக உயர்ந்து வந்த நிலையில், வாரத்தின் முதல் நாளான திங்கள்கிழமை கிராமுக்கு ரூ. 15 குறைந்து, ரூ.13,950-க்கும், சவரனுக்கு ரூ. 120 குறைந்து, ரூ.1,11,600-க்கும் விற்பனையானது.
Advertisement
Advertisement
இந்த நிலையில், சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று(ஆக. 11) அதிரடியாக சவரனுக்கு ரூ. 2,400 உயர்ந்து ஒரு சவரன் ரூ. 1,14,000-க்கும் கிராமுக்கு ரூ. 300 உயர்ந்து ஒரு கிராம் ரூ. 14,250-க்கும் விற்பனையாகிறது.
வெள்ளி விலை ரூ. 10 உயர்ந்து ஒரு கிராம் ரூ. 260-க்கும், ஒரு கிலோ (கட்டி வெள்ளி) ரூ. 2,60,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
The price of ornamental gold in Chennai has surged by rs. 2,400 per sovereign today (August 11).
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.