FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
வணிகம்

தங்கம் விலை அதிரடியாக ரூ. 2,160 உயர்வு! இன்றைய நிலவரம்! (ஆக. 6)

தங்கம் விலை ஒரே நாளில் சவரனுக்கு ரூ. 2,160 உயர்ந்துள்ளது குறித்து...

Updated On : 6 ஆகஸ்ட் 2026, 10:34 am IST
தங்கம் விலை குறைவு - கோப்புப்படம்
பகிர்:

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இரண்டாவது நாளாக வியாழக்கிழமை காலை அதிரடியாக சவரனுக்கு ரூ. 2,160 உயர்ந்துள்ளது.

சர்வதேச சந்தையில் தங்கத்தின் மீது முதலீட்டாளர்களின் ஆர்வம் அதிகரித்திருக்கும் நிலையில், தங்கத்தின் விலை கடும் ஏற்றத்தை கண்டுள்ளது.

கடந்த செவ்வாய்க்கிழமை கிராமுக்கு ரூ. 50 குறைந்து ரூ. 13,200-க்கும், சவரனுக்கு ரூ. 400 குறைந்து ரூ. 1,05,600-க்கும் விற்பனை செய்யப்பட்டது.

Advertisement

Advertisement

தொடர்ந்து நேற்று ஒரே நாளில் காலை, மாலை என இரண்டு முறை அதிரடியாக தங்கத்தின் விலை உயர்ந்தது. சென்னையில் நேற்று ஒரு சவரனுக்கு ரூ. 2,240 உயர்ந்து ரூ. 1,07,840-க்கும் விற்பனை செய்யப்பட்டது.

இந்த நிலையில், வியாழக்கிழமை காலையும் அதிரடியாக சவரனுக்கு ரூ. 2,160 உயர்ந்து, ஒரு சவரன் ரூ. 1,10,000-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராமுக்கு ரூ. 270 உயர்ந்து, ரூ. 13,750-க்கு விற்பனையாகிறது.

இதேபோல், வெள்ளியின் விலையும் வியாழக்கிழமை காலை அதிரடியாக கிராமுக்கு ரூ. 10 உயர்ந்து, ஒரு கிராம் ரூ. 250-க்கும், ஒரு சவரன் ரூ. 2,50,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

summary

Gold price surges by Rs. 2,160! Today's rates! (Aug. 6)

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments