ஆந்திரத்தில் ஆட்சியைப் பிடித்த தெலுங்கு தேசம் கட்சித் தலைவர் சந்திரபாபு நாயுடுவுக்கு, பிகார் முதல்வர் நிதிஷ்குமார் புதன்கிழமை வாழ்த்து தெரிவித்துள்ளார்.
சந்திரபாபு நாயுடுவுடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசிய நிதீஷ்குமார், அவரது தலைமையின்கீழ் தென் மாநிலங்கல் முன்னேறும் என்று நம்புவதாக முதல்வர் அலுவலகத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மத்தியில் ஆளும் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில், தெலுங்கு தேசம் கட்சிக்கு அடுத்தபடியாக, இரண்டாவது பெரிய கட்சியாக ஐக்கிய ஜனதா தளம் இருக்கிறது.
மக்களவையில் பா.ஜ.க.வுக்கு பெரும்பான்மை இல்லாததால், இரண்டு கூட்டணி கட்சிகளின் சிறப்பான தேர்தல் செயல்பாடுகள் மூலம், பிரதமர் நரேந்திர மோடியை தொடர்ந்து மூன்றாவது முறையாக மீண்டும் ஆட்சிக்கு வருவதற்கு பயனுள்ளதாக அமைந்தது.
மத்திய மந்திரி சபையில் தெலுங்கு தேசம் கட்சி மற்றும் ஐக்கிய ஜனதா தளம் ஆகிய இரு கட்சிகளுக்கும் தலா இரண்டு இடங்கள் வழங்கப்பட்டுள்ளன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.