தற்போதைய செய்திகள்

காலை, மாலை இருவேளைகளிலும் பேரவைத் தொடர்!

ஜூன் 20 ஆம் தேதி முதல் ஜூன் 29 ஆம் தேதி வரை சட்டப்பேரவை கூட்டத்தொடர் நடைபெறும் என்று பேரவைத் தலைவர் அப்பாவு தெரிவித்துள்ளார்.

DIN

ஜூன் 20 ஆம் தேதி முதல் ஜூன் 29 ஆம் தேதி வரை சட்டப்பேரவை கூட்டத்தொடர் நடைபெறும் என்று பேரவைத் தலைவர் அப்பாவு தெரிவித்துள்ளார்.

விளவங்கோடு சட்டப்பேரவை இடைத்தேர்தலில் வெற்றி பெற்ற காங்கிரஸின் தாரகை கத்பர்ட், சட்டப்பேரவை உறுப்பினராக புதன்கிழமை பதவியேற்றுக் கொண்டார். தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் சட்டப்பேரவைத் தலைவர் அப்பாவு பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.

இதனைத் தொடா்ந்து சட்டப்பேரவை அலுவல் ஆய்வுக் குழு கூட்டம் நடைபெற்றது.

அலுவல் ஆய்வுக் குழு கூட்டத்துக்குப் பின் செய்தியாளர்களுடன் பேரவைத் தலைவர் அப்பாவு பேசியதாவது:

ஜூன் 20 ஆம் தேதி தொடங்கும் பேரவை கூட்டத்தொடர் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் மறைவுக்கு இரங்கல் தெரிவித்த பின்னர், சட்டமன்ற உறுப்பினர் புகேழ்ந்தி மறைவுக்கு இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்படும்.

விக்கிரவாண்டி இடைத்தேர்தல் நடைபெறுவதன் காரணமாகவே ஜூன் 24ஆம் தேதி நடைபெற இருந்த பேரவை கூட்டத்தொடர் முன்னதாக நடத்தப்படுகிறது. ஜூன் 29 ஆம் தேதி வரை பேரவைத்தொடர் நடைபெறும்.

காலை 9.30 மணிக்கு பேரவைத் தொடங்கி காலை, மாலை என இருவேளைகளிலும் நடத்தப்படுகிறது. கிட்டத்தட்ட 16 அமர்வுகள் இருக்கும். அனைத்து கட்சியினரும் சேர்ந்து எடுத்த முடிவுதான்.

நாடாளுமன்றத் தேர்தலின்போதே விக்கிரவாண்டி தேர்தலும் நடத்தியிருக்கலாம்.

45 முதல் 50 நாள்கள் தேர்தல் நடக்கிறது. அப்போதே இந்த தேர்தலையும் நடத்தி இருக்கலாம், அதனால்தான் தற்போது மீண்டும் தேர்தல் நடைமுறைகள் அமலுக்கு வந்துள்ளன என்று அவர் தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தொடா் மழை: வீடு இடிந்து சேதம்

2 நாட்டுத் துப்பாக்கிகள் பறிமுதல்: ஒருவா் கைது

கலசப்பாக்கம், போளூரில் இன்று எடப்பாடி பழனிசாமி பிரசாரம்!

ராமாலை விஜயநகரத்தம்மன் கோயில் ஆடித் திருவிழா

வல்லக்கோட்டை முருகன் கோயிலில் பக்தா்கள் தரிசனம்

SCROLL FOR NEXT