முகப்பு
தற்போதைய செய்திகள்

அரசுப் பேருந்தில் ஏறிய முதியவரை கீழே தள்ளிவிடும் ஓட்டுநர், நடத்துநர்: வைரலாகும் விடியோ

திருப்பூர் புதிய பேருந்து நிலையத்தில் அரசுப் பேருந்தில் ஏறிய முதியவரை அரசு பேருந்து ஓட்டுநர், நடத்துநர் கீழே தள்ளும் காட்சி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Updated On : 16 ஜூன், 2024 at 2:25 PM
திருப்பூரில் அரசுப் பேருந்தில் ஏறிய முதியவரை கீழே தள்ளும் அரசு பேருந்து ஓட்டுநர், நடத்துநர்.
பகிர்:

திருப்பூர் புதிய பேருந்து நிலையத்தில் அரசுப் பேருந்தில் ஏறிய முதியவரை அரசு பேருந்து ஓட்டுநர், நடத்துநர் கீழே தள்ளும் காட்சி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இதனிடையே அரசுப் பேருந்தில் ஏறிய முதியவரை கீழே தள்ளிவிட்டு ஓட்டுநர் மற்றும் நடத்துநர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

திருப்பூர் புதிய பேருந்து நிலையத்தில் இருந்து ஈரோடு மாவட்டம் கோபிச்செட்டிப்பாளையம் செல்லும் TN43 N 0621 என்ற எண் கொண்ட அரசுப் பேருந்து இயக்கப்படுகிறது.

இந்தநிலையில், கடந்த வெள்ளிக்கிழமை அரசுப் பேருந்தில் சாக்கு மூட்டையுடன் ஏறிய முதியவரை ஓட்டுநர் முருகன்,நடத்துநர் தங்கராசு பேருந்தில் இருந்து இறக்கி விட்டு தாக்கியதுடன் கீழே தள்ளும் சம்பவமும் அரங்கேறி உள்ளது. இதனை அருகில் இருந்த நபர் விடியோவாக பதிவு செய்து சமூக வலைதளங்களில் பதிவிட தற்போது அந்த விடியோ வைரலாக பரவி வருகிறது.

இந்த சம்பவம் தொடர்பாக பேருந்து ஓட்டுநர் முருகன், நடத்துநர் தங்கராசு ஆகிய இருவரையும் ஈரோடு போக்குவரத்து கழக துணை மேலாளர் பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →