கோப்புப்படம் 
இந்தியா

அரசுப் பேருந்துகளை இயக்க பெண் ஓட்டுநர்கள்: ஒடிசா அரசு அதிரடி!

அரசுப் பேருந்துகளை பெண் ஓட்டுநர்கள் இயக்குவது பற்றி..

இணையதளச் செய்திப் பிரிவு

சாலைப் பாதுகாப்பை மேம்படுத்தும் நோக்கில் மாநில அரசால் இயக்கப்படும் பேருந்துகளை இயக்க பெண் ஓட்டுநர்களை நியமிக்க ஒடிசா அரசு முடிவு செய்துள்ளதாக அதிகாரி ஒருவர் தெரிவித்தனர்.

வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற மேம்பாட்டுத் துறை அமைச்சர் கிருஷ்ண சந்திர மொகபத்ரா தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டது.

பெண்களின் பாதுகாப்பு மற்றும் பாலின சமத்துவ வேலைவாய்ப்பின் முக்கியத்துவத்தை எடுத்துரைத்த அமைச்சர், மாநில பேருந்து சேவையை இயக்கும் தலைநகர பிராந்திய நகர்ப்புற போக்குவரத்து கழகத்தைச் சேர்ந்த 20 பெண் விண்ணப்பதாரர்கள் சிறப்பு மின்சாரப் பேருந்து ஓட்டுநர் பயிற்சி பெறுவதற்காக ஜனவரி 31 அன்று புணேவுக்கு அனுப்பப்படுவார்கள் என்று அவர் தெரிவித்தார்.

ஜனவரி 3 அன்று ரூபாலி சதுக்கத்தில் மாநில அரசுப் பேருந்து தொடர்பான விபத்தில் ஆட்டோ ஓட்டுநர் ஒருவர் உயிரிழந்ததைத் தொடர்ந்து ஏற்பட்ட பொதுமக்களின் கொந்தளிப்பை அடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

தலைநகர பிராந்திய நகர்ப்புற போக்குவரத்து வளாகத்தில் விரைவில் பிரத்யேக ஓட்டுநர் பயிற்சி நிறுவனம் அமைக்கப்படும் என்று அவர் கூறினார்.

இந்த நிறுவனம் நடைமுறை ஓட்டுநர் திறன்கள், நடத்தை பயிற்சி, போக்குவரத்து விதிகள், வழித்தட ஒழுக்கம் மற்றும் சாலைப் பாதுகாப்பு ஆகியவற்றில் கவனம் செலுத்தும்.

இந்தக் கூட்டத்தின் போது, அமைச்சர் அமா பேருந்து சேவையின் செயல்பாட்டுக் கட்டமைப்பை ஆய்வு செய்தார். மேலும், மாநிலம் முழுவதும் பொதுப் போக்குவரத்தை வலுப்படுத்தும் நோக்கில் பல்வேறு கட்டமைப்பு, பாதுகாப்பு மற்றும் சேவை மேம்பாட்டு நடவடிக்கைகள் குறித்தும் விவாதித்தார்.

In a bid to enhance road safety, the Odisha government has decided to induct women drivers to operate state-run 'Ama' buses, officials said.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மதுரை மீனாட்சியம்மன் கோயில் தெப்பத்திருவிழா தொடக்கம்!

பிபிஎல்: மீண்டும் மழை! 4 ரன்கள் வித்தியாசத்தில் மெல்பர்ன் அணி தோல்வி!

பதிவுத்துறை இணையதளம் இயங்காது! முன்கூட்டியே பயன்படுத்த அறிவுறுத்தல்!

பதற்றங்களுக்கு மத்தியில் சென்செக்ஸ் 82 ஆயிரத்துக்கு கீழே சென்று நிறைவு!

நாட்டை உலுக்கிய அத்துமீறல் விடியோ! கேரள பெண் கைது!

SCROLL FOR NEXT