தூத்துக்குடி துறைமுகத்தில் நிறுத்தப்பட்டிருந்த சரக்கு கப்பல் 
தற்போதைய செய்திகள்

தூத்துக்குடி துறைமுகத்தில் பிலிப்பின்ஸ் மாலுமி தற்கொலை

தூத்துக்குடி துறைமுகத்தில் நிறுத்தப்பட்டிருந்த சரக்கு கப்பலில் பிலிப்பின்ஸ் நாட்டு மாலுமி தற்கொலை செய்து கொண்டது தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

DIN

தூத்துக்குடி: தூத்துக்குடி துறைமுகத்தில் நிறுத்தப்பட்டிருந்த சரக்கு கப்பலில் பிலிப்பின்ஸ் நாட்டு மாலுமி தற்கொலை செய்து கொண்டது தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தூத்துக்குடி துறைமுகத்திற்கு எம் வி ஸ்டார் லாரா என்ற நிலக்கரி ஏற்றி வந்த கப்பல் கடந்த 17 ஆம் தேதி தூத்துக்குடி துறைமுகம் வந்தது. துறைமுகத்தில் பெர்த் கிடைக்காததால் துறைமுகத்துக்கு வெளியே நங்கூரமிட்டு நிறுத்தப்பட்டு இருந்தது.

இந்த கப்பலில் புதன்கிழமை பிலிப்பின்ஸ் நாட்டை சேர்ந்த மாலுமி சினம்பன் கிம் ஜோரன் என்பவர் கப்பலில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது.

இது தொடர்பாக தகவல் தூத்துக்குடி கடலோர பாதுகாப்பு குழும போலீசாருக்கு புதன்கிழமை இரவு தெரிவிக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து வியாழக்கிழமை காலையில் உயிரிழந்த மாலுமியின் சடலத்தை கடலோர பாதுகாப்பு குழும போலீசார் கைப்பற்றி, தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு உடல் கூராய்வுக்காக அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து தூத்துக்குடி கடலோர பாதுகாப்பு குழும போலீசார் வழக்குப் பதிவு செய்து மாலுமி உயிரிழந்ததற்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சிகப்பு நிலவு... சாக்ஷி அகர்வால்!

பூவே... கீர்த்தி சுரேஷ்!

பரிசுத்தம்.... கல்யாணி!

இந்தியா மீது கணிசமாக வரி உயர்த்தப்படும் - டிரம்ப்

கனமழை எச்சரிக்கை: நீலகிரியில் பள்ளிகளுக்கு நாளை விடுமுறை!

SCROLL FOR NEXT