கோவையில் நடைபெற்றா எக்ஸ்பிரஸ் ஹீரோ ரைடு சேப் இந்தியா நிகழ்ச்சி. 
தற்போதைய செய்திகள்

கோவையில் தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் - ஹீரோ மோட்டோ கார்ப் நடத்திய சாலைப் பாதுகாப்பு இயக்கம்!

கோவையில் எக்ஸ்பிரஸ் ஹீரோ ரைடு சேப் இந்தியா என்ற தலைக்கவச சாலைப் பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.

DIN

கோவையில் எக்ஸ்பிரஸ் ஹீரோ ரைடு சேப் இந்தியா என்ற பெயரில் தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் குழுமம், ஹீரோ மோட்டோ கார்ப் நிறுவனத்துடன் இணைந்து நடத்திய தலைக்கவச சாலைப் பாதுகாப்பு விழிப்புணர்வு வாகனப் பேரணி இன்று(ஜூன் 20) நடைபெற்றது.

3 நாள் நடைபெறும் இந்நிகழ்ச்சியை கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் பாடி, கோவை மாநகர் காவல் ஆணையர் வி. பாலகிருஷ்ணன் ஆகியோர் தொடக்கி வைத்தனர்.

நிகழ்ச்சியில் பேசிய கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் பாடி.

மேலும் இந்நிகழ்ச்சியில் தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் – ஹீரோ மோட்டோ கார்ப் இணைந்து நடத்தும் சாலைப் பாதுகாப்பு விழிப்புணர்வு இயக்கத்தைக் கோவை மாநகர் காவல் ஆணையர் வி. பாலகிருஷ்ணன், சென்னை சில்க்ஸ் – குமரன் தங்க மாளிகை தலைவர் டி.கே. சந்திரன், எஸ்என்ஆர் சன்ஸ் அறக்கட்டளை இணை நிர்வாக அறங்காவலர் ஆர். சுந்தர், டாக்டர் முத்து மருத்துவமனை தலைவர் டாக்டர் முத்து சரவண குமார் ஆகியோர் பங்கேற்றனர்.

நிகழ்ச்சியில் பங்கேற்றோர்.

இந்நிகழ்வில் கோவை மாநகரின் முக்கிய சாலைகளில் இரு சக்கர வாகன விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. இதில் பங்கேற்றவர்கள் மற்றும் இரு சக்கர வாகன ஓட்டிகளுக்கு இலவச தலைக்கவசம் வழங்கப்பட்டது.

இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சி சனிக்கிழமை வரை நடைபெறுகிறது. இதற்கான ஏற்பாடுகளை தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் குழுமத்தின் கோவை மைய முதுநிலை மேலாளர் தியாகராஜன் தலைமையிலான குழுவினர் செய்திருந்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

4 சுங்கச் சாவடிகள்: 50% கட்டணத்தை செலுத்த தமிழ்நாடு அரசு முடிவு! - நீதிமன்றத்தில் தகவல்

ஐஐடி மும்பையில் விடுதியின் கட்டடத்தில் இருந்து குதித்து மாணவர் தற்கொலை

நான் துரோகம் செய்யவில்லை, தற்கொலைக்கு முயன்றேன்..! விவாகரத்து பற்றி சஹால்!

மாலை மலர்ந்த ஊதா... அம்ரிதா ஐயர்!

மோடியின் கைப்பாவையாக மாறிய தேர்தல் ஆணையம்: கார்கே குற்றச்சாட்டு!

SCROLL FOR NEXT