தற்போதைய செய்திகள்

அறந்தாங்கி அருகே தேர் கட்டும்போது விபத்து: ஒருவர் பலி

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே முத்துமாரியம்மன் கோவில் தேர்த் திருவிழாவுக்கு தேர் கட்டும் பணியின்போது ஏற்பட்ட விபத்தில் ஒருவர் பலியானார்.

DIN

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே முத்துமாரியம்மன் கோவில் தேர்த் திருவிழாவுக்கு தேர் கட்டும் பணியின்போது ஏற்பட்ட விபத்தில் ஒருவர் பலியானார். மேலும், 5 பேருக்கு பேராவூரணி அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே மாத்தூர் ராமசாமிபுரத்திலுள்ள முத்துமாரியம்மன் கோவில் தேர்த் திருவிழாவுக்காக தேர் கட்டும் பணி திங்கள்கிழமை பகலில் நடைபெற்றது.

அப்போது எதிர்பாராத விதமாக தேர் சரிந்து விழுந்து விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் கீழே நின்றிருந்த ராமசாமிபுரத்தைச் சேர்ந்த எஸ். மகாலிங்கம் (70) என்பவர் உள்பட 6 பேர் காயமடைந்தனர்.

இவர்கள் அனைவரும் பேராவூரணி அரசு மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் மூலம் அழைத்துச் செல்லப்பட்டனர்.

ஆனால் மகாலிங்கம் மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே பலியானார். மற்ற 5 பேருக்கும் அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வேலூா் மாவட்டத்தில் 15 துணை வட்டாட்சியா்கள் இடமாற்றம்

ஆடிப் பெருக்கு தினத்தில் பெண்கள் சிறப்பு பூஜை

இளைஞா்களுக்கு அதிகரித்துவரும் மாரடைப்பு அபாயம்! இதய நல மருத்துவா்கள் எச்சரிக்கை

கூத்தாநல்லூரில் ஆடிப்பெருக்கு

கூட்டுறவு முழுநேர பட்டயப் படிப்பில் சேர காலநீட்டிப்பு

SCROLL FOR NEXT