மலர் தொடரில் இருந்து விலகிய நாயகி!
மலர் தொடரில் இருந்து அத்தொடரின் நாயகி பிரீத்தி ஷர்மா விலகியுள்ளார்.
மலர் தொடரில் இருந்து அத்தொடரின் நாயகி பிரீத்தி ஷர்மா விலகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
சன் தொலைக்காட்சியில் மலர் தொடர் கடந்தாண்டு பிப். 27 முதல் ஒளிபரப்பாகி வருகிறது. இத்தொடரின் பிரதான பாத்திரங்களில் பிரீத்தி ஷர்மாவும், விஜே சுரேந்தர் ராஜும் நடித்து வருகின்றனர்.
இத்தொடர் அக்கா - தங்கை பாசத்தை அடிப்படையாக கொண்டு நண்பகல் 12 மணிக்கு திங்கள் முதல் சனிக்கிழமை வரை ஒளிபரப்பாகி வருகிறது.
Advertisement
Advertisement
இந்த நிலையில், மலர் தொடரின் நாயகி பிரீத்தி ஷர்மா, இத்தொடரில் இருந்து விலகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இது குறித்து அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மகாராஷ்டிரத்தைச் சேர்ந்த பிரீத்தி ஷர்மா, கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான திருமணம் தொடர் மூலம் சின்னத்திரையில் நுழைந்தார். இதனைத் தொடர்ந்து சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சித்தி-2 தொடரில் வெண்பா பாத்திரத்தில் நடித்து ரசிகர்களில் மத்தியில் பிரபலமானார்.
தொடர்ந்து, மலர் தொடரில் நடித்துவந்த பிரீத்தி ஷர்மா, இத்தொடரில் இருந்து விலகியுள்ளது அவரது ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.