தற்போதைய செய்திகள்

ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் : இந்தியா முதலிடம்

ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தரவரிசையில் இந்தியா முதலிடத்துக்கு முன்னேறியுள்ளது.

DIN

ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தரவரிசையில் இந்தியா முதலிடத்துக்கு முன்னேறியுள்ளது.

வெலிங்டனில் நடைபெற்ற நியூஸிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட்டில் ஆஸ்திரேலியா வெற்றியடைந்ததைத் தொடர்ந்து, ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தரவரிசையில் இந்தியா முதலிடத்துக்கு முன்னேறியுள்ளது.

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இந்த ஆட்டத்தில், நியூசிலாந்து அணி 172 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வியை சந்தித்தது. இதன்மூலம், ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தரவரிசையில் முதலிடத்தில் இருந்த நியூசிலாந்து, 60 சதவிகித வெற்றிகளுடன் 2-வது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளது.

இந்திய கிரிக்கெட் அணி 64.58 சதவிகித வெற்றிகளுடன் ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப்பட்டியலில் முதலிடம் பெற்றுள்ளது. ஆஸ்திரேலிய அணி 59.09 சதவிகித வெற்றிகளுடன் 3-வது இடத்தில் தொடருகிறது.

தரம்சாலாவில் மார்ச் 7-ஆம் தேதி தொடங்கும், இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில், இங்கிலாந்து அணி வெற்றியடைந்தால், ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தரவரிசையில் ஆஸ்திரேலியா முதலிடத்துக்கு முன்னேறும் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

செங்கோட்டை காா் குண்டுவெடிப்பு: நஸீா் பிலாலை மேலும் 7 நாள்கள் விசாரிக்க என்ஐஏவுக்கு அனுமதி

தில்லியில் முதல் கட்டமாக 10,000 வகுப்பறைகளில் காற்று சுத்திகரிப்பான்கள் நிறுவப்படும்: அமைச்சா் ஆஷிஷ் சூட் அறிவிப்பு

தில்லியில் மாசு கட்டுப்பாட்டு சான்றிதழ் இல்லாத சுமாா் 2800 வாகனங்களுக்கு எரிபொருள் மறுப்பு

புத்தொழில் திட்டத்தில் மாவட்டத்தின் முதல் கிராமமாக ‘ஆசனூா்’ தோ்வு

காஜிப்பூா் குப்பைக் கிடங்கில் கசிந்த அடா் புகை

SCROLL FOR NEXT