மு.க. ஸ்டாலின்  கோப்புப் படம்
தற்போதைய செய்திகள்

நானும் ஒரு டெல்டாகாரன்.. முதல்வர் மு.க. ஸ்டாலின் பதிவு!

மயிலாடுதுறை, திருவாரூர், நாகை மாவட்ட மக்களுக்கான திட்டப்பணிகளைத் தொடங்கி வைத்த முதல்வர்.

DIN

நாம் என்றும் மக்கள் பக்கம், மக்கள் என்றும் நம் பக்கம் என முதல்வர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலக புதிய கட்டடம் மன்னம்பந்தல் ஊராட்சி மூங்கில்தோட்டம் பால்பண்ணை பகுதியில் ரூ.114 கோடியே 48 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டது.

இதனை முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று (மார்ச் 4) திறந்து வைத்தார். இதற்காக நேற்று மாலை சென்னையிலிருந்து செந்தூர் விரைவு ரயிலில் முதல்வர் பயணம் செய்து மயிலாடுதுறைக்குச் சென்றார். ஆட்சியர் அலுவலகத்தை திறந்துவைத்து சிறப்புரையாற்றினார்.

அதனைத் தொடர்ந்து தற்போது சமூக வலைதளத்தில் (எக்ஸ்) பதிவிட்டுள்ள முதல்வர் மு.க. ஸ்டாலின்,

நானும் ஒரு டெல்டாகாரன் என்ற பாச உணர்வோடு மயிலாடுதுறை, திருவாரூர், நாகை மாவட்ட மக்களுக்கான திட்டப்பணிகளைத் தொடங்கி வைத்தேன்.

சிலர் போல, தேர்தல் நேரத்தில் மட்டும் வருபவர்கள் அல்ல நாங்கள். எப்போதும் எந்தச் சூழலிலும் தமிழ்நாட்டு மக்களோடு அவர்களின் உரிமைகளுக்காக நிற்பவர்கள்! நாம் என்றும் மக்கள் பக்கம்! மக்கள் என்றும் நம் பக்கம். திராவிட மாடல் எனக் குறிப்பிட்டு பதிவிட்டுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பள்ளியில் சமத்துவப் பொங்கல்

எய்ட்ஸ் கட்டுப்பாட்டு அலகு சாா்பில் பொங்கல் விழா

ஈரான் வெளியுறவு அமைச்சருடன் எஸ். ஜெய்சங்கர் பேச்சு!

ஜார்க்கண்ட்டில் வெடி விபத்து : 3 பேர் பலி, இருவர் படுகாயம்

மஹிந்திரா எக்ஸ்யூவி - 7எக்ஸ்ஓ மற்றும் எக்ஸ்இவி - 9எஸ் காரின் முன்பதிவு தொடங்கியது!

SCROLL FOR NEXT