ஒரே நாளில் 5,367 அடுக்குமாடி குடியிருப்புகளை திறந்து வைத்த முதல்வர்!
5,367 அடுக்குமாடி குடியிருப்புகளை முதல்வர் மு.க. ஸ்டாலின் திறந்து வைத்தார்.
தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் வரலாற்றில் முதல்முறையாக இன்று ஒரே நாளில் ரூ. 840.76 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள 5,367 அடுக்குமாடி குடியிருப்புகளை முதல்வர் மு.க. ஸ்டாலின் திறந்து வைத்தார்.
ரூ. 420.34 கோடி மதிப்பீட்டில் 1984 புதிய அடுக்குமாடிக் குடியிருப்புகள் கட்டுவதற்கு இன்றையதினம்(மார்ச் 2) அடிக்கல் நாட்டினார்.
முதல்வர் மு.க.ஸ்டாலின், வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறையின் தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் வரலாற்றில் முதல்முறையாக இன்று (மார்ச் 2) ஒரேநாளில் மறு கட்டுமானத் திட்டத்தின் கீழ், சென்னையில்
9 திட்டப்பகுதிகளில் ரூ. 696.55 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள 4.035 புதிய அடுக்குமாடி குடியிருப்புகள், அனைவருக்கும் வீட்டு வசதி திட்டத்தின் கீழ் வெளி மாவட்டங்களில் 4 திட்டப்பகுதிகளில் ரூ. 144.21 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள 1,332 புதிய அடுக்குமாடி குடியிருப்புகள், என மொத்தம் 13 திட்டப்பகுதிகளில் ரூ. 840.76 கோடி செலவில் புதிதாக கட்டப்பட்டுள்ள 5367 குடியிருப்புகளை திறந்து வைத்து, பயனாளிகளுக்கு குடியிருப்புக்கான ஒதுக்கீடு ஆணைகளை வழங்கினார்.
Advertisement
Advertisement
மேலும், 2 திட்டப்பகுதிகளில் ரூ. 420.34 கோடி மதிப்பீட்டில் 1984 புதிய அடுக்குமாடிக் குடியிருப்புகள் கட்டுவதற்கு அடிக்கல் நாட்டினார்.
இப்புதிய குடியிருப்புகள், ஒவ்வொன்றும் தலா 400 சதுர அடி பரப்பளவுடன், ஒரு பல்நோக்கு அறை, படுக்கை அறை, சமையல் அறை மற்றும் கழிவறை ஆகிய வசதிகளுடன் கட்டப்பட்டுள்ளது.
மேலும், அனைத்து குடியிருப்பு வளாகங்களும், தார் சாலை வசதி, குடிநீர்வசதி, கழிவு நீரேற்று வசதி, மழைநீர் சேகரிப்பு கட்டமைப்பு ஆகிய வசதிகளுடன் கட்டப்பட்டுள்ளன.
முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையிலான அரசால் இந்த ஐந்து ஆண்டுகளில் தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் சார்பில் 209 திட்டப் பகுதிகளில் 74,126 அடுக்குமாடி குடியிருப்புகள் வீடற்ற ஏழை எளிய மக்களுக்காகவும், குடிசைப் பகுதிகளில் வாழும் மக்களுக்காகவும் திறந்து வைக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
For the first time in the history of the Tamil Nadu Urban Habitat Development Board, Chief Minister M.K. Stalin inaugurated 5,367 apartments built at a cost of Rs. 840.76 crore in a single day today.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.