தற்போதைய செய்திகள்

சிலிண்டர் விலை குறைப்பு: கனிமொழி எம்.பி. கருத்து

DIN

தூத்துக்குடி: தூத்துக்குடி வ.உ.சிதம்பரம் கல்லூரியில் சனிக்கிழமை நடைபெற்ற காது மற்றும் பேச்சு குறைபாடு உள்ள குழந்தைகளுக்கான மருத்துவ முகாமினை மக்களை உறுப்பினர் கனிமொழி தொடங்கி வைத்தார்.

பின்னர் அவர் செய்தியாளரிடம் கூறியது: தூத்துக்குடி வ‌.உ.சிதம்பரம் கல்லூரியில் காது மற்றும் பேச்சு குறைபாடு உள்ள குழந்தைகளுக்கான இலவச மருத்துவ முகாம் நடைபெற்று வருகிறது. தொடர்ந்து 10 ஆம் தேதி திருச்செந்தூர் ஆதித்தனார் கல்லூரியில் முகாம் நடைபெறுகிறது. இந்த முகாமில் காது மற்றும் பேச்சு குறைபாடு உள்ள குழந்தைகளை பெற்றோர் அழைத்துச் சென்று பயனடையுமாறு கேட்டுக்கொள்கிறேன்.

தேர்தல் வருகிறது என்பதற்காக பிரதமர் மோடி அடிக்கடி தமிழகத்திற்கு வருகிறார். சர்வதேச மகளிர் நாளில் பெண்களுக்காக பல்வேறு திட்டங்களை செய்திருக்கலாம்.‌ ஆனால், பெண்கள் சமையலறையிலேயே இருக்க வேண்டும் என்ற நோக்கத்தில் சிலிண்டர் விலையை குறைத்துள்ளார் என்று கனிமொழி தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஆலங்குளம் எம்எல்ஏ மனோஜ் பாண்டியன் ராஜிநாமா!

சிறப்பு தீவிர திருத்தம்: ஆரம்ப நிலையிலேயே தோல்வி - இந்திய கம்யூ.,

எஸ்ஐஆர் இறப்புகள்! தில்லியில் போராட்டம் நடத்த திரிணமூல் காங்கிரஸ்?

கைதி - 2 என்ன ஆனது?

ஐசிசி பேட்டிங் தரவரிசை: தெ.ஆ. கேப்டன் லாரா, ஜெமிமா அதிரடி முன்னேற்றம்! ஸ்மிருதிக்கு சரிவு!

SCROLL FOR NEXT