சென்னை: மக்களவைத் தேர்தலில் மக்கள் நீதி மய்யம் கட்சி போட்டியிடவில்லை. தேர்தலில் தி.மு.க. கூட்டணிக்காக கமல்ஹாசன் பிரசாரம் மட்டுமே செய்வார் எனவும், மாநிலங்களவைத் தேர்தலின்போது ஓர் இடம் வழங்குவதென்றும் முடிவு செய்து அறிவிக்கப்பட்டுள்ளது.
திமுக தலைவரும் முதல்வருமான மு.க.ஸ்டாலினும் மக்கள் நீதி மய்ய கட்சியின் தலைவர் கமல்ஹாசனும் சனிக்கிழமை நேரில் சந்தித்து ஆலோசனை நடத்தினர்.
அப்போது, 2024 மக்களவைத் தேர்தலில் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி உள்ளிட்ட தொகுதிகளிலும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் சார்பில் திமுக கூட்டணிக்கு ஆதரவாகத் தேர்தல் பிரசாரப் பணிகள் மேற்கொள்வதெனவும், வரும் 2025 ஆம் ஆண்டு நடைபெற உள்ள மாநிலங்களவைத் தேர்தலில் மக்கள் நீதி மய்யத்திற்கு ஒரு இடம் ஒதுக்கீடு செய்வதெனவும் முடிவு செய்து அறிவிக்கப்பட்டுள்ளது.
போட்டியிடவில்லை
மக்களவைத் தேர்தலில் நான் போட்டியிடவில்லை. ஆனால், இந்த கூட்டணிக்கு எல்லா ஒத்துழைப்பும் அளிப்போம். இது பதவிக்கான விஷயம் அல்ல, நாட்டுக்கான விஷயம் என்பதால் எங்கே கைகுலுக்க வேண்டுமோ அங்கு கைகுலுக்கியுள்ளேன் என கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.