தற்போதைய செய்திகள்

அதிகாரத்தை பயன்படுத்தி நிறுவனங்களை மிரட்டி பாஜக பணம் பறித்திருக்கிறது: கார்த்திக் சிதம்பரம் பேட்டி

DIN

ஆம்பூா்:அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி நிறுவனங்களை மிரட்டி பாஜக பணம் பறித்திருக்கிறது என்று சிவகங்கை தொகுதி காங்கிரஸ் மக்களவை உறுப்பினர் கார்த்திக் சிதம்பரம் குற்றம்சாட்டினார்.

திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி பகுதியில் காங்கிரஸ் மாநில பொதுச் செயலாளர் விஜய் இளஞ்செழியன் குடும்ப நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்வதற்காக வந்த காங்கிரஸ் கார்த்திக் சிதம்பரம் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.

அப்போது, அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி நிறுவனங்களை மிரட்டி தேர்தல் பத்திரம் மூலம் நன்கொடை பெற்றுள்ளது பாஜக. லாபமே இல்லாத நிறுவனங்கள் எல்லாம் தேர்தல் பத்திரம் மூலம் இவ்வளவு நிதி நன்கொடையாக கொடுத்திருப்பது வேடிக்கையாக இருக்கிறது. இதை பாா்க்கும்போது தோ்தல் பத்திர முறைகேட்டில் பாஜக ஈடுபட்டுள்ளது தெள்ளத் தெளிவதாக தெரியவந்துள்ளது.

தோ்தல் பத்திர முறைகேடு உச்சநீதி மன்ற உத்தரவால் தற்போது பொதுமக்களுக்கு தெரியவந்துள்ளது. உச்ச நீதிமன்றம் இதில் நன்கொடை கொடுத்தார்கள் யார், பெற்றார்கள் யார் என்பதை மட்டும் விசாரிக்காமல் இதன் பின்னணியையும் விசாரிக்க வேண்டும். மேலும் இதனை ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் தனி விசாரணை ஆணையம் அமைத்து சுதந்திரமாக விசாரணை நடத்த உச்ச நீதிமன்றம் உத்தரவிட வேண்டும்.

ஒரே நாடு- ஒரே தேர்தல் குறித்து செய்தியாளர்களுக்கு எழுப்பிய கேள்விக்கு, ஒரே நாடு - ஒரே தோ்தல் பாராளுமன்ற ஜனநாயகத்திற்கு எதிரானது. தற்போது நடைபெற உள்ள நாடாளுமன்ற தோ்தலை ஒரே நாடு - ஒரே கட்டம் - ஒரே நாள் தோ்தலாக நடத்த வேண்டும். எதற்காக இந்த நாடாளுமன்ற தேர்தலை ஒன்றரை மாதம் நடத்துகிறார்கள்.மோடியின் தேர்தல் சுற்றுப்பயண விவரங்களை முன்கூட்டியே பெற்றுக்கொண்டு அந்த பயணத்தை அடிப்படையாக கொண்டே தேர்தல் தேதிகளை அமைத்து இருக்கிறார்கள். ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்தை அறிவிப்பதற்கு முன்பாக ஒரே நாளில் தேர்தலை நடத்தலாம் நமது நாட்டில் அதற்கான கட்டமைப்பு இல்லையா என கார்த்திக் சிதம்பரம் கேள்வி எழுப்பினார்.

மேலும், ஈரான்,ஈராக் பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் ஆகியவற்றை ஒன்றிணைத்த அகண்ட பாரதத்தில் வேண்டுமானால் 400 தொகுதிகளை ஜெயிப்பதாக பாஜக கனவு காணலாம்.

பாஜக என்பது ஹிந்தி இந்துத்வா கட்சி ஹிந்தி பேசாத மாநிலங்கள் என எடுத்துக்கொண்டால் குஜராத்தை தவிர வேறு எந்த மாநிலத்திலும் அவா்களுக்கு செல்வாக்கே கிடையாது.

அமலாக்கத்துறை என்பது பாஜகவின் கைகூலியாக செயல்படும் துறையாகும். தில்லி முதலமைச்சா் மீது வழக்கு பதிவு செய்வது, அமலாக்கத் துறையில் ஆஜராக சம்மன் அனுபவது ஆகியவை அவரை மிரட்டுவதற்காக படுத்தப்படும் ஒரு கருவியாக அமலாக்கத் துறை உள்ளது. இதனை நீதிமன்றம் தான் தடுக்க வேண்டும்.

வருகின்ற நாடாளுமன்ற தோ்தலில் காங்கிரஸ் கட்சி இந்தியா கூட்டணி அமோக வெற்றி பெறப்போகின்றது. தமிழகம், பாண்டிச்சேரி உள்பட 40 தொகுதிகளில் திமுக தலைமையிலான இந்தியா கூட்டணி மாபெரும் வெற்றி பெறும் என்று கார்த்திக் சிதம்பரம் தெரிவித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பொருளாதாரத்தை மேம்படுத்த கஞ்சாவை சட்டபூர்வமாக்கும் பாகிஸ்தான்!

வாகனங்களில் ஸ்டிக்கர்: மருத்துவர்களுக்கு அனுமதி தர மறுப்பு!

தெலங்கானாவில் ஓட்டு கேட்க பிரதமர் மோடிக்கு உரிமை இல்லை: முதல்வர் ரேவந்த் ரெட்டி

இந்தியன் - 28!

சவுக்கடியுடன் 8 ஆண்டுகள் சிறைத் தண்டனை பெறும் ஈரானிய இயக்குநர்!

SCROLL FOR NEXT