கோப்புப் படம். 
தற்போதைய செய்திகள்

பெங்களூரு வந்தடைந்தார் விராட் கோலி

DIN

நடப்பு ஐபிஎல் தொடரில் பங்கேற்பதற்காக ஆர்சிபி அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி பெங்களூரு வந்தடைந்தார்.

ஐபிஎல் தொடர் வரும் மார்ச் 22 ஆம் தேதி முதல் தொடங்கவுள்ளது. சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறும் தொடக்க ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதுகின்றன. கடந்த 15ஆண்டுகளாக ஆர்சிபி அணி சேப்பாக்கம் மைதானத்தில் ஒரு போட்டியில் கூட வென்றதில்லை. அந்த வரலாற்றை மாற்ற ஆர்சிபி வீரர்கள் தீவிர பயிற்சியில் ஏற்கெனவே இறங்கிவிட்டனர்.

இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரிலிருந்து தனிப்பட்ட காரணங்களுக்காக ஆர்சிபி அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி விலகுவதாக அறிவித்தார். தொடர்ந்து ஜனவரி மாதம் லண்டன் சென்ற அவர் தனக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளதாக எக்ஸ் வலைத்தளப் பதிவின் மூலம் தெரிவித்தார். இதனால் ஐபிஎல் தொடரின் முதல் ஆட்டத்தில் விராட் கோலி பங்கேற்பாரா என்கிற கேள்வி எழுந்தது.

இந்த நிலையில் நடப்பு ஐபிஎல் தொடரில் பங்கேற்பதற்காக ஆர்சிபி அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி நேற்றிரவு இந்தியா திரும்பினார். மும்பை விமான நிலையம் வந்திறங்கிய அவரது புகைப்படங்கள் இணையத்தில் வைரலானது. இந்த நிலையில் நடப்பு ஐபிஎல் தொடரில் பங்கேற்க ஆர்சிபி அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி பெங்களூரு வந்தடைந்தார்.

கோலியின் வருகையை இன்ஸ்டாவில் அறிவித்துள்ள ஆர்சிபி அணி, மிகவும் விரைவாக நடக்கிறது, நாங்கள் மெதுவாக்கவில்லை. அவர் இங்கே இருக்கிறாரா? எனக் குறிப்பிட்டுள்ளது. ஐபிஎல் தொடங்கியதில் இருந்து ஆர்சிபி அணியில் பயணித்து வரும் விராட் கோரி நாளை (மார்ச் 19) நடைபெறும் அந்த அணியின் 'அன்பாக்ஸ்' நிகழ்ச்சியிலும் பங்கேற்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

குளத்தில் மூழ்கி குழந்தை உயிரிழப்பு

ஐபிஎல் மினி ஏலம் - அதிக விலைக்கு ஏலத்தில் எடுக்கப்பட்ட வீரர்கள் யார்யார் தெரியுமா?

மோடிக்காக கார் ஓட்டுநராக மாறி இன்ப அதிர்ச்சியளித்த எத்தியோப்பிய பிரதமர்!

எத்தியோப்பியாவில் பிரதமர் மோடி! பிரதமர் அபி அகமது அலியுடன் சந்திப்பு!

ஈரோட்டில் நடைபெறும் விஜய் பிரசாரக் கூட்ட முன்னேற்பாடுகள் குறித்து Sengottaiyan!

SCROLL FOR NEXT