சுரேந்திர சிங் 
தற்போதைய செய்திகள்

கலவரம், அடிதடி - முன்னாள் பாஜக எம்.எல்.ஏ மீது வழக்குப்பதிவு!

உத்தரப்பிரதேசத்தில் கலவரம், தாக்குதலில் ஈடுபட்டதாக முன்னாள் பாஜக எம்.எல்.ஏ உள்பட 7 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

DIN

உத்தரப்பிரதேசத்தின் பல்லியா மாவட்டத்தில் நேற்று (மே. 29) கலவரம் மற்றும் தாக்குதலில் ஈடுபட்டதாக முன்னாள் பாஜக எம்.எல்.ஏ, அவரது மகன் உள்பட 7 பேர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

அங்குள்ள கரஞ்சப்ரா கிராமத்தைச் சேர்ந்த சந்தோஷ் குமார் சிங் என்பவர், மே 29 அன்று அந்தப் பகுதியிலுள்ள பெட்ரோல் பங்க் அருகே ஏற்பட்ட வாக்குவாதத்தில் அவர்கள் தன்னைத் தாக்கியதாகக் குற்றம் சாட்டியுள்ளார்.

இதனைத் தொடர்ந்து, முன்னாள் பாஜக எம்.எல்.ஏ சுரேந்திர சிங், அவரது மகன் பூஷன் சிங் மற்றும் மேலும் 5 பேரின் மீது சந்தோஷ் குமார் சிங் கொடுத்த புகாரின் பேரில் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

அவர்கள் மீது அளிக்கப்பட்ட புகாரின் பேரில், இந்திய தண்டனைச் சட்டத்தின் பிரிவுகள் 308 (கொலைமுயற்சி), 147 (கலவரத்தைத் ஏற்படுத்துதல்), 323 (தெரிந்தே ஒருவருக்குக் காயத்தை ஏற்படுத்துதல்), 506 (அச்சுறுத்தும் வகையில் மிரட்டுதல்) கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டதாக தொகாட்டி பகுதி காவல்நிலைய அதிகாரி தரம்வீர் சிங் தெரிவித்தார்.

குற்றம் சாட்டப்பட்டவர்களில், சுரேந்திர சிங் 2017 சட்டமன்றத் தேர்தலில் பைரியா தொகுதியில் பாஜக சார்பில் நின்று வெற்றிபெற்று எம்.எல்.ஏ ஆனார். ஆனால், அடுத்த தேர்தலில் கட்சி அவருக்கு வாய்ப்பு வழங்க மறுத்துவிட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து குறைவு: உபரி நீர் மதகுகள் மூடல்!

பிரிட்டன் அமைச்சரைச் சந்தித்த முதல்வர் ஸ்டாலின்!

ஜிஎஸ்டி குறைப்பு வரவேற்கத்தக்கது; ஆனால், பிகார் தேர்தல் காரணமா? - காங்கிரஸ் கேள்வி

விஜய் வியூகம் வெற்றி பெறுமா? - அா்ஜுன் சம்பத்

மீட்புப் பணி போட்டி: முதலிடம் பெற்ற ஊா்க்காவல் படையினருக்கு பாராட்டு

SCROLL FOR NEXT