தீபாவளியையொட்டி, தமிழகத்தில் இரண்டு நாள்களில் ரூ.438.53 கோடிக்கு மதுபானம் விற்பனை செய்யப்பட்டுள்ளது. கடந்த ஆண்டை விட ரூ.29 கோடி விற்பனை குறைந்துள்ளது.
கடந்த புதன்கிழமை ரூ.202.59 கோடிக்கும், தீபாவளி பண்டிகையான வியாழக்கிழமை ரூ.235.94 கோடிக்கும் மதுபானம் விற்பனையாகியுள்ளதாக டாஸ்மாக் நிா்வாகம் தெரிவித்துள்ளது.
டாஸ்மாக் நிறுவனம், சென்னை, மதுரை, திருச்சி, சேலம், கோவை என 5 மண்டலங்களாக செயல்பட்டு வருகிறது. அதில் அதிகபட்சமாக புதன்கிழமை சென்னை மண்டலத்தில் ரூ.47.16 கோடிக்கும், தீபாவளி பண்டிகை நாளான வியாழக்கிழமை ரூ.54.18 கோடிக்கும் மதுபானம் விற்பனையாகியுள்ளது.
குறைந்த அளவாக கோவை மண்டலத்தில் புதன்கிழமை ரூ.36.40 கோடிக்கும், வியாழக்கிழமை ரூ.42.34 கோடிக்கும் கோடிக்கும் மதுபானம் விற்பனை செய்யப்பட்டுள்ளது.
மதுரை மண்டலத்தில் புதன்கிழமை ரூ.40.88 கோடிக்கும், தீபாவளி பண்டிகை நாளான வியாழக்கிழமை ரூ.47.73 கோடிக்கும் மதுபானம் விற்பனை செய்யப்பட்டுள்ளது.
இதையும் படிக்க |டிஜிட்டல் அரெஸ்ட்!! 10 மாதங்களில் ரூ. 2,140 கோடி மோசடி!
திருச்சி மண்டலத்தில் புதன்கிழமை ரூ.39.81 கோடிக்கும், தீபாவளி பண்டிகை நாளான வியாழக்கிழமை ரூ.46.51 கோடிக்கும் மதுபானம் விற்பனை செய்யப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு அக்.24-ஆம் தேதி (திங்கள்கிழமை) தீபாவளியன்று ஒரே நாளில் மட்டும் ரூ.256 கோடிக்கு மதுபானம் விற்பனையானது.
கடந்த ஆண்டு தீபாவளி பண்டிகை மற்றும் பண்டிகைக்கு முந்தைய நாள் சேர்த்து ரூ.467.63 கோடிக்கு மதுபானங்கள் விற்பனையானது. இந்த ஆண்டு ரூ.29.10 கோடி அளவுக்கு மதுபானங்கள் விற்பனை குறைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
மதுபானங்கள் விற்பனை குறைந்ததற்கு மாத இறுதியில் தீபாவளி பண்டிகை வந்ததே காரணம் என கூறுகின்றனர். ஆனால், 1,500 அரசு மதுபான கடைகள் குறைந்தாலும், தனியார் மனமகிழ் மன்றங்கள், உணவக விடுதிகளுடன் கூடிய பார்களின் எண்ணிக்கை அதிகமாகி வருவதே அரசு மதுபான கடைகளில் மதுபான விற்பனை குறைந்ததற்கு காரணம் என டாஸ்மாக் கடை விற்பனையாளர்கள் கூறுகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.