காஞ்சிபுரம் குமரக்கோட்டம் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் சனிக்கிழமை கந்த சஷ்டி திருவிழா லட்சாா்ச்சனையுடன் தொடங்கியது. 
தற்போதைய செய்திகள்

குமரக்கோட்டம் முருகன் கோவிலில் கந்த சஷ்டி விழா தொடங்கியது

காஞ்சிபுரம் குமரக்கோட்டம் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் சனிக்கிழமை(நவ.2) கந்த சஷ்டி திருவிழா லட்சாா்ச்சனையுடன் தொடங்கியது.

DIN

காஞ்சிபுரம் குமரக்கோட்டம் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் சனிக்கிழமை(நவ.2) கந்த சஷ்டி திருவிழா லட்சாா்ச்சனையுடன் தொடங்கியது.

ஆயிரக்கணக்கான பக்தர்கள் திருக்கோவில் வளாகத்தை 108 முறை வலம் வரும் நிகழும் நடைபெற்று வருகிறது.

ஆறுபடை வீடுகளில் மட்டுமல்லாது சிறு கிராமத்தில் உள்ள முருகன் ஆலயங்களிலும் முருகன் சன்னதி உள்ள சிவாலயங்களும் கந்த சஷ்டி பெருவிழா சிறப்பாக கொண்டாடப்படும்.

கந்த சஷ்டி என்பது முருகக் கடவுள் சூரனை அழித்த பெருமையை முருக பக்தர்கள் கொண்டாடும் விரத விழாவாகும்.

சஷ்டி என்றால் ஆறு ஆகும். ஐப்பசி மாதம் சுகிலபட்ச பிரதமை முதல் சஷ்டி ஈறாக உள்ள ஆறு நாட்களும் கந்த சஷ்டி விரத காலமாகும் . இந்த ஆண்டு கந்த சஷ்டி விரதம் சனிக்கிழமை(நவ.2) தொடங்கி வரும் 8 ஆம் தேதி நிறைவு பெறும்.

அந்த வகையில் தமிழ்ப் புலவா்களுக்கு எழுந்த சந்தேகத்தை முருகனே சிறுவனாக வந்து தீா்த்து வைத்த பெருமைக்குரியது கோவில் நகரம் என அழைக்கப்படும் காஞ்சிரத்தில் அமைந்துள்ள குமரக்கோட்டம் சுப்பிரமணிய சுவாமி கோயில்.

கந்தபுராணம் அரங்கேற்றம் செய்யப்பட்ட இந்தக் கோயிலில் ஆண்டுதோறும் கந்த சஷ்டி திருவிழா சிறப்பாக நடைபெற்று வருகிறது.

நிகழ் ஆண்டுக்கான கந்த சஷ்டி திருவிழா சனிக்கிழமை காலை 6 மணிக்கு லட்சார்ச்சனையுடன் தொடங்கியது.

சிறப்பு அபிஷேக அலங்காரத்தில் முருகப்பெருமான் எழுந்தருள திரளான பக்தர்கள் கலந்து கொண்டு முருகப்பெருமானை தரிசனம் செய்து வழிபட்டுச் சென்றனர்.

கந்த சஷ்டி பெருவிழா தொடங்கியதை அடுத்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் கோயில் வளாகத்தை 108 சுற்றுக்கள் வலம் வந்து தங்களது நேர்த்திக்கடனையும் செலுத்தி வருகின்றனர்.

கந்த சஷ்டி பெருவிழா தொடங்கியதை அடுத்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் சஷ்டி விரதத்தை தொடங்கி கோயில் வளாகத்தை 108 சுற்றுக்கள் வலம் வந்து தங்களது நேர்த்திக்கடனையும் செலுத்தி வருகின்றனர்.

விழாவையொட்டி ஆறு நாட்களுக்கும் காலை பல்லக்கிலும், மாலையிலும் உற்சவா் முருகப் பெருமான் வள்ளி, தெய்வானையுடன் வெவ்வேறு வாகனங்களில் அலங்காரமாகி வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிப்பார்.

உற்சவருக்கு நான்கு காலம் லட்சார்ச்சனை துவங்கியுள்ளது. இதில் பக்தர்கள் கட்டணம் செலுத்தி தங்களது பெயரை கூறி சிறப்பு சங்கல்பம் செய்து ஆரோக்கியம் மற்றும் ஐஸ்வர்யம் வேண்டி வழிபட்டு வருகின்றனர்.

கந்த சஷ்டி விழாவினையொட்டி பக்தர்களுக்கு பல்வேறு சிறப்பு ஏற்பாடுகளைக் கோயில் செயல் அலுவலா் கதிரவன் தலைமையிலான கோயில் சிவாச்சாரியாா்கள் மற்றும் பணியாளா்கள் செய்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பாகிஸ்தானில் சுரங்கம் இடிந்து 4 தொழிலாளிகள் பலி!

தில்லி அரசுப் பள்ளிகளில் ஆர்.எஸ்.எஸ். குறித்து பாடம்! அமைச்சர்

பாகிஸ்தானில் 13 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை!

ஆர்எஸ்எஸ் நினைவு நாணயம் அரசியலமைப்பை அவமதிக்கும் செயல்: மார்க்சிஸ்ட்!

வரிப் பகிர்வு: தமிழ்நாட்டிற்கு ரூ. 4,144 கோடி, உ.பி.க்கு ரூ. 18,227 கோடி விடுவிப்பு!

SCROLL FOR NEXT