சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் கடும் பெரும் போக்குவரத்து நெரிசலால் ஊர்ந்து செல்லும் வாகனங்கள். 
தற்போதைய செய்திகள்

சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல்!

சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் கடும் பெரும் போக்குவரத்து நெரிசல் காரணமாக வாகனங்கள் ஊர்ந்து செல்கின்றன.

DIN

சென்னை: சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் கடும் பெரும் போக்குவரத்து நெரிசல் காரணமாக வாகனங்கள் ஊர்ந்து செல்கின்றன.

தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து தீபாவளி பண்டிகைக்கான தொடர் விடுமுறை முடிந்து திங்கள்கிழமை மீண்டும் பள்ளி, கல்லூரி திறப்பதால் தலைநகர் சென்னை, திருச்சி, கரூா், சேலம், கோவை உள்ளிட்ட வெளியூா்களில் படிக்கும் மாணவ, மாணவிகள், பணியாளர்கள் என பலா் மாநகரங்களை நோக்கி திரும்பவர்களின் எண்ணிக்கை ஞாயிற்றுக்கிழமை காலை முதலே அதிகரித்து வந்தது. காலை 11 முதலே அரசு, தனியாா் பேருந்துகளில் மக்கள் அலைமோதினா்.

ஆயிரக்கணக்கான வாகனங்கள் சென்னையை நோக்கி வருவதால் நெடுஞ்சாலைகளில் கடும் போக்குவரத்து நெரில் ஏற்பட்டுள்ளது.

விக்கிரவாண்டி சுங்கச்சாவடியை ஆயிரக்கணக்கான வாகனங்கள் கடந்து செல்லும் நிலையில், போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்காக கூடுதல் கவுன்டர்கள் திறக்கப்பட்டு வாகனங்களை வேகமாக அனுப்பி வருகின்றனர்.

பரனூர் அருகே சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் ஆயிரக்கணக்கான வாகனங்கள் ஊர்ந்து செல்கின்றன. பரனூர் சுங்கச்சாவடியில் அதிகப்படியான பணியாளர்கள் நியமிக்கப்பட்டு வாகனங்களை வேகமாக அனுப்பி வருகின்றனர்.

போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்தும் பணியில் 100-க்கும் மேற்பட்ட காவலர்கள் ஈடுபட்டுள்ளனர்.

இருப்பினும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் ஒரே நேரத்தில் மாநகருக்குள் நுழைவதால் பெருங்களத்தூரில் கடுமையான போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் வாகனங்கள் ஒன்றன்பின் ஒன்றாக வரிசையாக ஊா்ந்து செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் மிகவும் அவதியுற்றனா்.

இதேபோன்று தமிழத்தின் நகர ரயில் நிலையங்களிலும் மக்கள் கூட்டம் அலைமோதுவதால் அதிகளவில் போலீசார் போதுகாப்புப் பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

விபத்தில் காயமடைந்த நபா் உயிரிழப்பு

நீட்தோ்வில் வெற்றி பெற்ற மலைக் கிராம மாணவா்!

அறிவுசாா்ந்த இளம் தலைமுறையினா் அரசியலில் வெற்றிடம் ஏற்பட விடக்கூடாது: உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி இப்ராஹிம் கலிபுல்லா

திருவண்ணாமலையில் நாளை தேசிய கைத்தறி தினவிழா

கொடைக்கானலில் அனுமதியின்றி கட்டப்படும் அடுக்குமாடிக் கட்டடங்கள்!

SCROLL FOR NEXT