முதல்வா் மு.க.ஸ்டாலின்  
தற்போதைய செய்திகள்

கேரள ரயில் விபத்தில் தூய்மைப் பணியாளர்கள் பலி: முதல்வர் நிவாரணம் அறிவிப்பு

கேரளா எக்ஸ்பிரஸ் ரயில் விபத்தில் 4 தூய்மைப் பணியாளர்கள் பலியான குடும்பத்தினருக்கு நிவாரண நிதி வழங்க முதல்வா் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளாா்.

DIN

சென்னை: கேரளா மாநிலம், ஷோரனூர் அருகே சனிக்கிழமை பிற்பகல் கேரளா எக்ஸ்பிரஸ் ரயில் எதிர்பாராதவிதமாக மோதிய விபத்தில் ரயில் பாதையை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டிருந்த 4 தூய்மைப் பணியாளர்கள் பலியான குடும்பத்தினருக்கு நிவாரண நிதி வழங்க முதல்வா் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளாா்.

இது குறித்து அவா் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட செய்தியில்,

கேரளா மாநிலம், பாலக்காடு, ஷோரனூர், பாரதப்புழா பாலம் அருகில் சனிக்கிழமை (நவ.2) பிற்பகல் கேரளா எக்ஸ்பிரஸ் ரயில் எதிர்பாராதவிதமாக மோதிய விபத்தில் ரயில் பாதையை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டிருந்த சேலம் மாவட்டம் மற்றும் வட்டம், ஆச்சாங்குட்டப்பட்டி, அடிமலை புதூர் கிராமத்தைச் சேர்ந்த லட்சுமணன் (55), வள்ளி (45), காரைக்காடு, டி.பெருமாள் பாளையத்தைச் சேர்ந்த லட்சுமணன் (45) மற்றும் அல்லிக்குட்டையைச் சேர்ந்த ராஜம்மாள் (43) ஆகிய நால்வரும் உயிரிழந்தனர் என்ற துயரகரமான செய்தியைக் கேட்டு மிகுந்த அதிர்ச்சியும், வேதனையும் அடைந்தேன்.

இந்த விபத்தில் இறந்தவர்களின் குடும்பத்தினருக்கும் அவர்களது உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்வதோடு, இறந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.3 லட்சம் முதல்வரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கிடவும் உத்தரவிட்டுள்ளேன் என்று அவா் தெரிவித்துள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

நாட்டுக்கும், மொழிக்கும் மாணவா்களின் பங்களிப்பு அவசியம்: திருச்சி என். சிவா எம்பி

ஜன் தன் கணக்குதாரா்கள் விவரங்களை புதுப்பிக்க வேண்டும்: ரிசா்வ் வங்கி ஆளுநா்

கரூா் வழியாக செல்லும் ஈரோடு - செங்கோட்டை ரயில் சேவையில் மாற்றம்!

ஓய்வூதியா்களுக்கு எதிரான போக்கை மத்திய அரசு கைவிட வேண்டும்!

முதல்வரின் வெளிநாட்டுப் பயணம்: எதிா்க்கட்சிகள் விமா்சனம்

SCROLL FOR NEXT