காருக்குள் சிக்கிய 4 குழந்தைகள் மூச்சுத் திணறல் ஏற்பட்டு பலியான சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்த சம்பவம் குஜராத் மாநிலம் அம்ரேலி மாவட்டத்தில் உள்ள ரந்தியா கிராமத்தில் சனிக்கிழமை நடந்துள்ளது.
பலியான குழந்தைகள் மத்தியப் பிரதேசத்தில் உள்ள தார் பகுதியைச் சேர்ந்த விவசாய கூலித் தொழிலாளிகளின் குழுந்தைகள் என்று காவல் துறை துணைக் கண்காணிப்பாளர் சிராஜ் தேசாய் தெரிவித்தார்.
சனிக்கிழமை காலை 7.30 மணிக்கு, பாரத் மந்தானி என்பவரின் விவசாய நிலத்தில் வேலை செய்வதற்காக பெற்றோர்கள் தங்களது 7 குழந்தைகளை வீட்டில் விட்டுவிட்டு வேலைக்குச் சென்றபோது இந்த சம்பவம் நடந்துள்ளது.
4 குழந்தைகள் தங்கள் வீட்டில் அருகே நிறுத்தப்பட்டு இருந்த பண்ணை உரிமையாளரின் காரில் விளையாடிக் கொண்டிருந்தனர். அப்போது, காருக்குள் இருந்த குழந்தைகள் கதவை தவறுதலாக உள்ளே பூட்டியுள்ளனர்.
இந்த நிலையில், மூச்சுத் திணறல் ஏற்பட்டு 4 குழந்தைகள் பலியானதாக காவல் துறை அதிகாரிகள் தெரிவித்தனர். பலியான குழந்தைகளின் வயது 2 முதல் 7 வயது வரை இருக்கும்.
குழந்தைகளின் பெற்றோர்கள் மற்றும் கார் உரிமையாளர் சனிக்கிழமை மாலை வந்து பார்த்தபோது, குழந்தைகளின் உடல்கள் இறந்த நிலையில் கிடந்துள்ளது.
இந்த வழக்கு அம்ரேலி காவல் நிலையத்தில் விபத்தால் ஏற்பட்ட மரணம் என்று பதிவு செய்யப்பட்டு, விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.