தற்போதைய செய்திகள்

வாயு கசிவு: திருவொற்றியூர் தனியார் பள்ளி தற்காலிகமாக மூடல்!

திருவொற்றியூர் தனியார் பள்ளியில் ஏற்பட்ட வாயு கசிவு தொடர்பாக...

DIN

திருவொற்றியூரில் உள்ள தனியார் பள்ளியில் இன்று மீண்டும் வாயு கசிவு ஏற்பட்டதால், தற்காலிகமாக பள்ளி மூடப்பட்டது.

சென்னை திருவொற்றியூர் கிராமத்து தெருவில் தனியார் பள்ளியொன்று இயங்கி வருகிறது. இதில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனர்.

சில நாள்களுக்கு முன்பு, இப்பள்ளியில் வாயு கசிவு ஏற்பட்டதால் மூச்சுத் திணறல் ஏற்பட்டு 35-க்கும் , மேற்பட்ட மாணவர்கள் மயங்கிய விழுந்த நிலையில், பின்னர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று திரும்பினர்.

இதையும் படிக்க: சென்னை அருகே சாலை விபத்து: இரண்டு பெண் காவலர்கள் பலி

சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு பத்து நாள்களுக்கு இந்த தனியார் பள்ளியை மூட உத்தரவிடப்பட்டது.

இந்த நிலையில், தனியார் பள்ளி இன்று(நவ. 4) மறுபடியும் திறக்கப்பட்டது.

காலை வழக்கம்போல் பள்ளி செயல்பட்டு வந்த நிலையில், மீண்டும் வாயு கசிவு ஏற்பட்டுள்ளது. இதில் 2 மாணவிகள் மயங்கி விழுந்தனர்.

இந்த சம்பவம் தொடர்பாக காவல் துறையினர் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில், பள்ளியை தற்காலிகமாக மூட அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஆத்தூா் அருகே இருசக்கர வாகனம் மீது காா் மோதியதில் இருவா் உயிரிழப்பு

ஆத்தூரில் கருமாரியம்மன் கோயில் தேரோட்டம்

மேட்டூா் அணை உபரிநீா் கால்வாயில் அழுகிய மீன்களை அகற்றும் பணி

இலங்கைக் கடற்படையினரால் நம்புதாளை மீனவா்கள் 4 போ் கைது

பெண்ணை வாளால் வெட்டிய இருவா் கைது

SCROLL FOR NEXT