தமிழக அரசு Din
தற்போதைய செய்திகள்

35 ஆண்டுகாலப் பிரச்னைக்கு முதல்வர் தீர்வு: தமிழக அரசு

கோவை மாவட்ட ஆய்வு மூலம் தீர்வு கண்டு சாதனை.

DIN

35 ஆண்டுகாலப் பிரச்னைக்கு முதல்வர் ஸ்டாலின் தீர்வு கண்டு சாதனை படைத்ததாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்ட செய்திக் குறிப்பு:

கோவை விளாங்குறிச்சியில் தகவல் தொழில் நுட்பப் பூங்காவை தொடக்கி வைத்த முதல்வர் மு.க.ஸ்டாலின், தொடர்ந்து கள ஆய்வில் முதலமைச்சர் நிகழ்ச்சியில் பங்கேற்றார்.

அப்போது பொதுமக்கள் பலரும் அளித்த மனுக்களைப் பெற்றுக் கொண்டு உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள அதிகாரிகளுக்கு ஆணைகள் பிறப்பித்தார். 

இதையும் படிக்க: கோவையில் ரூ. 300 கோடி மதிப்பில் 'பெரியார் நூலகம்' - முதல்வர் அடிக்கல் நாட்டினார்!

முதல்வரின் முன்னெடுப்புத் திட்டத்தின்கீழ், தமிழ்நாடு வீட்டுவசதி வாரியத்தால் கையகப்படுத்தப் பட்டிருந்த கோயம்புத்தூர் வடக்கு, கோயம்புத்தூர் தெற்கு மற்றும் பேரூர் வட்டங்களைச் சேர்ந்த கிராமங்களில் உள்ள 468.89 ஏக்கர் நிலங்களுக்கு நில எடுப்பிலிருந்து விலக்களித்து அதற்கான விடுவிப்பு ஆணைகளை நில உரிமையாளர்களுக்கு வழங்கினார். 

இதன்மூலம் 35 ஆண்டுகாலப் பிரச்னைக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் 3 மணிநேர கோவை மாவட்ட ஆய்வு மூலம் தீர்வு கண்டு சாதனை படைத்துள்ளார்.

முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் நில எடுப்பு விடுவிக்கப்பட்டு நில உரிமைக்கான ஆணையைப் பெற்றுக் கொண்ட பலரும் முதல்வரை வெகுவாகப் பாராட்டியுள்ளதாகத் தமிழக அரசு தெரிவித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஜாய் கிரிசில்டா குழந்தைக்கு நான்தான் தந்தை!! ஒப்புக்கொண்ட மாதம்பட்டி ரங்கராஜ்

பாரதியின் காளி

கிட்னி முறைகேடு: அரசு வழக்கறிஞர் முறையாக வாதிடவில்லை! - இபிஎஸ் குற்றச்சாட்டு

உலகப் புகழ்பெற்ற நாட்டுப்புறவியல் கட்டுரைகள்

சுவிஸ் தமிழ் எழுத்தாளர்கள் (தொகுதி 1)

SCROLL FOR NEXT