தஞ்சாவூர்: திமுகவை அழிக்க வேண்டும் என நினைப்பவர்களுக்கு தமிழக மக்களே பதிலடி தருவார்கள் என துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார்.
தஞ்சாவூா் கலைஞா் அறிவாலயத்தில் முரசொலி செல்வம் படத்திறப்பு நிகழ்ச்சி, ராமநாதன் ரவுண்டானா அருகே மக்களவை உறுப்பினா் அலுவலகம் மற்றும் நூலகத் திறப்பு விழா, மேல வஸ்தா சாவடி பகுதியில் பூதலூா் வடக்கு ஒன்றியச் செயலா் கல்லணை செல்லக்கண்ணு இல்லத் திருமண விழா, கண்டியூரில் கழகப் பவள விழாவையொட்டி கட்சி கொடியேற்றுதல், கோனேரிராஜபுரத்தில் பேரறிஞா் அண்ணா, கருணாநிதி சிலை திறப்பு மற்றும் நூலகத் திறப்பு விழா ஆகியவற்றில் கலந்து கொள்வதற்காக துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலினுக்கு திமுக நிா்வாகிகள், தொண்டா்கள் வரவேற்பு அளித்தனா்.
தஞ்சாவூர் புதிய பேருந்து நிலையம் அருகே பூதலூர் வடக்கு ஒன்றியச் செயலா் கல்லணை செல்லக்கண்ணு இல்லத் திருமண விழா வியாழக்கிழமை நடைபெற்றது. இந்த திருமண நிகழ்வில் துணை முதல்வர் கலந்து கொண்டு திருமணத்தை நடத்தி வைத்தார்.
இதற்கு விண்ணப்பித்துவிட்டீர்களா..? வாய்ப்பை மிஸ்பண்ணிடாதீங்க... 1500 வங்கி அலுவலர் பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு!
பின்னர் அவர் பேசுகையில், திமுகவை அழைப்பேன் என்று இன்று பலபேர் கிளம்பி இருக்கிறார்கள். அதற்கெல்லாம் நாம் பதிலளிக்க வேண்டிய அவசியம் இல்லை. தமிழக மக்கள் அதற்கான பதிலடியை கொடுப்பார்கள். திமுக தொண்டர்கள் மகிழ்ச்சியாக - உற்சாகமாக இருக்கின்றார்கள். இந்த உற்சாகம்தான் எதிரணியினருக்கு மிகுந்த எரிச்சலை தருகிறது. முதல்வர் ஸ்டாலின் தலைமையில் நாம் தருகின்ற தொடர் வெற்றி தான் அவர்களுக்கு மிகப்பெரிய எரிச்சலைத் தருகின்றது.
பல்வேறு அணிகளாக பிரிந்து கிடக்கும் அதிமுகவும், யாருமே சீண்டாத பாஜகவும் எப்படியாவது திமுகவில் ஒரு விரிசல் விழுந்துடாதா என துண்டு போட்டு காத்திருக்கிறார்கள். ஆக நாம் நம்முடைய பணிகளில் மட்டும் கவனம் செலுத்த வேண்டும். இன்னும் ஒன்றரை ஆண்டுகளில் சட்டப்பேரவைத் தேர்தல் வரவுள்ளது. தலைவர் 200 தொகுதியில் நாம் வெற்றி பெற வேண்டும் என இலக்கு நிர்ணயித்துள்ளார். அந்த இலக்கை நோக்கி நாம் அனைவரும் ஒற்றுமையாக பணியாற்றுவோம். 2026 இல் திமுக மீண்டும் ஆட்சி அமைத்து, தலைவர் இரண்டாவது முறையாக முதல்வராக பொறுப்பேற்பார். திமுக ஏழாவது முறையாக ஆட்சி அமைத்தது என்ற வரலாற்றை உருவாக்க வேண்டும். அதற்கான உறுதியை இந்த தஞ்சை மண்ணில் அனைவரும் ஏற்க வேண்டும் என அவர் கூறினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.