தற்போதைய செய்திகள்

'சகோதரர் சீமான்'- பிறந்த நாள் வாழ்த்து கூறிய விஜய்!

நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் பிறந்த நாள் வாழ்த்து கூறியுள்ளார்.

DIN

நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் பிறந்த நாள் வாழ்த்து கூறியுள்ளார்.

நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் இன்று(நவ. 8) தனது பிறந்த நாளைக் கொண்டாடுகிறார். இதையொட்டி அரசியல் கட்சியினர், கட்சித் தொண்டர்கள் பலரும் அவருக்கு வாழ்த்துத் தெரிவித்து வருகின்றனர்.

சமீபமாக சீமானால் அதிகம் விமரிசிக்கப்பட்ட நடிகர் விஜய்யும் சீமானுக்கு வாழ்த்து கூறியுள்ளார்.

நடிகரும் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவருமான விஜய் தனது எக்ஸ் பக்கத்தில்,

'நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சகோதரர் சீமானுக்கு இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்' என்று பதிவிட்டுள்ளார்.

விஜய்யின் இந்த பதிவு அரசியல் ரீதியாக கவனம் பெற்றுள்ளது.

தொடக்கத்தில் விஜய் கட்சி தொடங்குவதாக அறிவித்தபோது சீமான் அவருக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் பேசி வந்தார்.

ஆனால் அக்டோபர் இறுதியில் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாட்டுக்குப் பிறகு விஜய்யை சீமான் கடுமையாக விமரிசித்தார்.

தமிழ் தேசியத்துக்கு விஜய் முக்கியத்துவம் அளிப்பார் என்று சீமான் எதிர்பார்த்த நிலையில், விஜய் தமிழ் தேசியம், திராவிடம் இரண்டையும் தனது கொள்கையில் குறிப்பிட்டுள்ளார். இதனையடுத்தே சீமான், விஜய்யை மிகவும் கடுமையாக விமரிசித்திருந்தார்.

பாமக தலைவர் அன்புமணி ராமதாஸும் சீமானுக்கு வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.

அதுபோல விசிக தலைவர் திருமாவளவன், பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் ஆகியோருக்கு பிறந்த நாள் வாழ்த்து கூறிய விஜய், நேற்று திமுக கூட்டணியில் உள்ள மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல் ஹாசனுக்கு வாழ்த்து கூறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ரெப்கோ வங்கியில் மார்க்கெட்டிங் அசோசியேட் பணிகள்

தொழிற்பயிற்சி மையத்தில் அக்கவுண்ட் ஆபீசர் பணி

நடிகர் மதன் பாப் உடல் தகனம்

“Button Phone போதும்!” எனக்கு போனில் பேசப் பிடிக்காது! கேப்டன் எம்.எஸ்.தோனி

தமிழகத்தில் 5 நாள்களுக்கு கனமழை! எந்தெந்த மாவட்டங்களில்?

SCROLL FOR NEXT