பிரதமர் நரேந்திர மோடி  கோப்புப் படம்
தற்போதைய செய்திகள்

டெல்லி கணேஷ் மறைவு: பிரதமர் மோடி இரங்கல்

திரைப்பட நடிகர் டெல்லி கணேஷ் மறைவுக்கு பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.

DIN

திரைப்பட நடிகர் டெல்லி கணேஷ் மறைவுக்கு பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக தனது எக்ஸ் தளப் பக்கத்தில் அவர் பதிவிட்டுள்ளதாவது,

''புகழ்பெற்ற திரைப்பட ஆளுமை டெல்லி கணேஷ் மறைவு வருத்தமளிக்கிறது. அசாத்தியமான நடிப்புத் திறமையால் ஆசிர்வதிக்கப்பட்டவர் டெல்லி கணேஷ். ஒவ்வொரு கதாபாத்திரத்திலும் அவர் கொண்டுவந்த நடிப்பின் ஆழம் மற்றும் தலைமுறைகளைக் கடந்து பார்வையாளர்களைக் கவரும் திறமையாலும் டெல்லி கணேஷ் நினைவுகூரப்படுவார். நாடகத்திலும் மிகுந்த ஆர்வம் கொண்டவர். டெல்லி கணேஷை இழந்து வாடும் அவரின் குடும்பத்தினருக்கும் ரசிகர்களுக்கும் ஆழ்ந்த இரங்கல்'' எனப் பதிவிட்டுள்ளார்.

பிரபலங்கள் இரங்கல்

வயது முதிர்வு மற்றும் உடல்நலக்குறைவு காரணமாக நடிகர் டெல்லி கணேஷ் (80) இன்று (நவ. 10) காலமானார். சென்னை ராமாபுரத்தில் உள்ள அவரது இல்லத்தில் உயிர் பிரிந்தது.

டெல்லி கணேஷின் உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக இவரின் வீட்டில் வைக்கப்பட்டுள்ளது. இவரின் மறைவுக்கு திரைத் துறையை சேர்ந்த பலரும் சமூக வலைதளங்களில் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

தூத்துக்குடியில் பிறந்த டெல்லி கணேஷ், தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னடம் ஆகிய மொழிகளில் 400க்கும் அதிகமான படங்களில் நடித்துள்ளார். நகைச்சுவை, குணச்சித்திரம், வில்லன், காமெடி என பல்வேறு வகையான கதாபாத்திரங்களில் திறம்பட நடித்தவர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

“அன்னைக்கே உன்ன தட்டிருக்கணும்” மயிலாடுதுறை ஆணவக்கொலை சம்பவம்: பெண்ணின் தாயார் மிரட்டிய விடியோ!

தில்லியில் அமித் ஷாவை சந்தித்த எடப்பாடி பழனிசாமி!

“Feel Good, Comedy Film!” குமாரசம்பவம் படம் பற்றி பிரபலங்கள்!

காஸாவில் பெண்கள், குழந்தைகள், மாற்றுத்திறனாளிகளை நினைத்துப்பாருங்கள்! -இஸ்ரேலிடம் ஐ.நா. மனித உரிமைகள் தலைவர்

மீனா பிறந்த நாளில் த்ரிஷ்யம் 3 போஸ்டர்!

SCROLL FOR NEXT