அரசுப் பணியாளர் தோ்வாணையம்  
தற்போதைய செய்திகள்

குரூப் 4 பணி: டிஎன்பிஎஸ்சி வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!

நவ. 21 ஆம் தேதி வரை சான்றிதழ் பதிவேற்றம் செய்யலாம்.

DIN

குரூப் 4 பணிக்கான சான்றிதழை பதிவேற்றம் செய்வதற்கு நவ. 21 ஆம் தேதி கடைசி நாள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

குரூப் 4 தேர்வினை 15.80 லட்சம் பேர் எழுதிய நிலையில், தேர்வு முடிவுகள் அரசுப் பணியாளர் தோ்வாணையத்தின் இணையதளத்தில் அக். 28-ல் வெளியிடப்பட்டது.

கிராம நிா்வாக உதவியாளா், இளநிலை உதவியாளா் உள்பட 8,932 குரூப் 4 காலிப் பணியிடங்களுக்குத் தேர்வு நடைபெற்ற நிலையில், 559 இடங்கள் கூடுதலாகச் சேர்க்கப்பட்டு, மொத்த காலியிடங்களின் எண்ணிக்கை 9,491-ஆக அதிகரிக்கப்பட்டது.

கடந்த நவ. 7-ல் சான்றிதழ் சரிபார்ப்புக்கு தேர்வானவர்களின் பட்டியலை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தோ்வாணையம் வெளியிட்டது.

டிஎன்பிஎஸ்சி இணைய தளம் மூலம் கணினி வழித்திரை சரிபார்ப்புக்கு நவ. 9 முதல் 21 வரை பதிவேற்றலாம் என்று அறிவிக்கப்பட்டது.

இந்த நிலையில், தேர்வர்கள் கடைசி நாள் வரை காத்திராமல் சான்றிதழ்களை உடனே பதிவேற்றம் செய்யுமாறு தமிழ்நாடு அரசுப் பணியாளர் தோ்வாணையம் அறிவுறுத்தியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கொலை வழக்கில் தொடா்புடையவருக்கு ஆயுள் தண்டனை

கோவை இளைஞரைக் கரம்பிடித்த அமெரிக்க பெண் பொறியாளா்

வெலிங்டன் ராணுவ பயிற்சி கல்லூரிக்கு வெடிகுண்டு மிரட்டல்

கோவை ஒருங்கிணைந்த நீதிமன்றத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்

தனியாா் கல்லூரி தூய்மைப் பணியாளா் தற்கொலை

SCROLL FOR NEXT