தற்போதைய செய்திகள்

4 நாள்களுக்குப் பிறகு உயர்ந்த தங்கத்தின் விலை! எவ்வளவு?

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை 4 நாள்களுக்குப் பிறகு இன்று(வெள்ளிக்கிழமை) சற்றே உயர்ந்துள்ளது.

DIN

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை 4 நாள்களுக்குப் பிறகு இன்று(வெள்ளிக்கிழமை) சற்றே உயர்ந்துள்ளது.

கடந்த வாரம் ஏறுமுகத்தில் இருந்த தங்கத்தின் விலை, இந்த வாரத்தில் அதிரடியாகக் குறைந்தது. கடந்த 4 நாள்களில் மட்டும் தங்கத்தின் விலை ஒரு சவரனுக்கு ரூ. 2,720 குறைந்தது. இதனால் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

இதையடுத்து 4 நாள்களுக்குப் பிறகு இன்று தங்கத்தின் விலை சற்றே உயர்ந்துள்ளது.

இன்று(வெள்ளிக்கிழமை) காலை நிலவரப்படி, ஒரு சவரனுக்கு ரூ. 80 உயர்ந்து ரூ. 55,560-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் தங்கம் ரூ. 10 உயர்ந்து ரூ. 6,945-க்கு விற்பனையாகிறது.

வெள்ளி விலையும் கடந்த சில நாள்கள் குறைந்த நிலையில், இன்று வெள்ளி விலையில் மாற்றமில்லை.

ஒரு கிராம் ரூ. 99-க்கும் கட்டி வெள்ளி ஒரு கிலோ ரூ. 99,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இந்த சர்ச்சையால்... கண்ணீர்விட்ட கயாது லோஹர்!

வங்கதேச வன்முறை- ஷேக் ஹசீனாவுக்கு மரண தண்டனை

கிண்டலில் தொடங்கி அழுகையில் முடிவு... உலகக் கோப்பையில் இருந்து ஹங்கேரி வெளியேற்றம்!

நகர் உலா... அனந்திகா!

யுகங்கள் போதாது...நிகிதா சர்மா

SCROLL FOR NEXT