கோப்புப்படம் 
தற்போதைய செய்திகள்

அடுத்த 3 மணி நேரத்துக்கு சென்னை உள்ளிட்ட 23 மாவட்டங்களில் மழை

தமிழகத்தில் அடுத்த 3 மணிநேரத்துக்கு சென்னை உள்பட 23 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.

DIN

தமிழகத்தில் அடுத்த 3 மணிநேரத்துக்கு சென்னை உள்பட 23 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தென் தமிழகம் மற்றும் அரபிக் கடல் பகுதிகளில் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் பெரும்பாலான மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது.

இதுதொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் தனது எக்ஸ் தளப் பக்கத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, விழுப்புரம், கடலூர், அரியலூர், பெரம்பலூர், மயிலாடுதுறை, காரைக்கால், நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், ராமநாதபுரம், சிவகங்கை, தூத்துக்குடி, தென்காசி, நெல்லை ஆகிய மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக திருநெல்வேலி மாவட்டம் ஊத்து மற்றும் நாலுமுக்கு பகுதியில் 100 மி.மீ., கக்காச்சியில் 90 மி.மீ. மழை பெய்துள்ளது.

சென்னையில் அதிகபட்சமாக மணலியில் 50 மி.மீ மழை பெய்துள்ளது.

குறைந்தபட்சமாக கோடம்பாக்கம், அடையாறு மற்றும் பெரும்பாலான மாவட்டங்களில் 10 மி.மீ. மழை பெய்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மேட்டூரில் ஆடிப்பெருக்கு பாதுகாப்பு பணிகள் தீவிரம்

ஏரியில் மூழ்கிய தொழிலாளியை தேடும் பணி தீவிரம்

சாலையில் கிடந்த கைப்பேசியை போலீஸில் ஒப்படைத்த இளைஞா்!

தேசிய மோட்டாா் பைக் பந்தயம்: சா்தக், ஜகதீஸ்வரி சிறப்பிடம்

ஏற்காட்டில் சுற்றுலாப் பயணிகள் வருகை அதிகரிப்பு!

SCROLL FOR NEXT