முகப்பு
தமிழ் திரைப்பட இயக்குநர் சுரேஷ் சங்கையா
தற்போதைய செய்திகள்

தமிழ் திரைப்பட இயக்குநர் சுரேஷ் சங்கையா மறைவு

தமிழ் திரைப்பட இயக்குநர் சுரேஷ் சங்கையா(41)உடல்நலக் குறைவால் வெள்ளிக்கிழமை இரவு 11 மணியளவில் (நவ.15) உயிரிழந்தார்.

தற்போதைய செய்திகள்

தமிழ் திரைப்பட இயக்குநர் சுரேஷ் சங்கையா மறைவு

தமிழ் திரைப்பட இயக்குநர் சுரேஷ் சங்கையா(41)உடல்நலக் குறைவால் வெள்ளிக்கிழமை இரவு 11 மணியளவில் (நவ.15) உயிரிழந்தார்.

Updated On : 16 நவம்பர், 2024 at 3:30 AM
தமிழ் திரைப்பட இயக்குநர் சுரேஷ் சங்கையா
பகிர்:

சென்னை: தமிழ் திரைப்பட இயக்குநர் சுரேஷ் சங்கையா(41)உடல்நலக் குறைவால் வெள்ளிக்கிழமை இரவு 11 மணியளவில் (நவ.15) உயிரிழந்தார். அவரது மறைவு திரையுலகினரை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.

விருதுநகர் மாவட்டம், ராஜபாளையம் அருகில் கரிசல்குளம் கிராமத்தை சேர்ந்தவர் சுரேஷ் கங்கையா. இவர் 2017 இல் ஒரு கிடாயின் கருணை மனு, 2023 இல் சத்திய சோதனை படத்தை இயக்கியுள்ளார். ஒரு கிடாயின் கருணை மனு திரைப்படம் விமரிசன ரீதியாக கவனம் பெற்றது.

இந்த நிலையில், கல்லீரல் செயலிழப்பால் உடல்நலம் பாதிக்கப்பட்டு வந்த சுரேஷ் சங்கையா, சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி வெள்ளிக்கிழமை இரவு 11 மணியளவில் உயிரிழந்தார்.

அவரது உடல் சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது.

இந்த தகவலை 2017 இல் அவருடன் இணைந்து பணியாற்றிய ஒளிப்பதிவாளர் சரண் உறுதிப்படுத்தினார்.

மறைந்த சுரேஷ் சங்கையாவுக்கு மனைவி மற்றும் இரண்டு குழந்தைகள் உள்ளனர்.

யோகி பாபு முக்கிய வேடத்தில் நடிக்கும் பெயரிடப்படாத மற்றொரு படத்தையும் சுரேஷ் சங்கையா இயக்கியுள்ளார்.

அவரது மறைவுக்கு திரையுல பிரமுகர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

முழு கட்டுரையைப் படிக்க →