முகப்பு
செய்திகள்

எகோ இயக்குநரைப் பாராட்டிய தனுஷ்!

தனுஷைச் சந்தித்த எகோ இயக்குநர்...

Updated On : 1 மார்ச், 2026 at 11:51 AM
பகிர்:
Updated On : 1 மார்ச், 2026 at 11:39 AM

நடிகர் தனுஷ் எகோ திரைப்பட இயக்குநர் தின்ஜித் அய்யதனை நேரில் அழைத்துப் பாராட்டியுள்ளார்.

கிஷ்கிந்தா காண்டம் திரைப்படத்தை இயக்கிய தின்ஜித் அய்யதன் இயக்கத்தில் ஒளிப்பதிவாளர் பாகுல் ரமேஷ் கதை, திரைக்கதையில் உருவான திரைப்படம் எகோ.

மலைத்தொடர்களால் சூழப்பட்ட ஒரு பகுதியில் காவல்துறையிடமிருந்து தப்பித்த குரியாச்சன் என்பவரைக் கண்டுபிடிக்கும் கதையில் சில சுவாரஸ்யமான திருப்பங்களும், திரில்லர் அம்சங்களும் இப்படத்தில் இடம்பெற்றிருந்தன.

Advertisement

Updated On : 1 மார்ச், 2026 at 11:42 AM

கடந்தாண்டு வெளியான இப்படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்ததால் கேரளம் மற்றும் தமிழ்நாடு மல்டிபிளக்ஸ் திரையரங்களில் கூடுதல் திரைகள் ஒதுக்கப்பட்டன.

இதனால், உலகளவில் ரூ. 55 கோடிக்கும் அதிகமாக இப்படம் வசூலித்து வெற்றிப்படமானது. அப்போதே, நடிகர் தனுச் இப்படத்தைப் பாராட்டி பதிவொன்றை வெளியிட்டார்.

இந்த நிலையில், இயக்குநர் தின்ஜித் அய்யதனை நடிகர் தனுஷ் நேரில் அழைத்துப் பாராட்டியுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.