29 புதிய அப்டேட்!
29 திரைப்படத்தின் புதிய பாடல் குறித்து...
இயக்குநர் ரத்னகுமாரின் 29 திரைப்பட பாடல் குறித்து அப்டேட் வெளியாகியுள்ளது.
மேயாத மான் படத்தின் மூலம் பிரபலமான இயக்குநர் ரத்னகுமார் இயக்கத்தில் புதிய திரைப்படம் உருவாகியுள்ளது. இதற்கு 29 எனப் பெயரிட்டுள்ளனர்.
இயக்குநர்கள் லோகேஷ் கனகராஜ், கார்த்திக் சுப்புராஜ் கூட்டுத் தயாரிப்பில் உருவான இதில் நாயகனாக விது நடிக்க, நாயகியாக ப்ரீத்தி அஸ்ரானி நடித்துள்ளார்கள். நடிகர் விது ஜிகர்தண்டா - 2, ரெட்ரோ திரைப்படங்களில் வில்லனாக நடித்து பிரபலமானவர்.
Advertisement
Advertisement
இப்படம் கோடை வெளியீடாகத் திரைக்கு வரவுள்ளது. இதன் முதல் பாடல் வெளியாகி கவனம் ஈர்த்திருந்த நிலையில், இப்படத்தின் இரண்டாவது பாடல் இன்று மாலை 6 மணிக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மேன்சன் குத்து எனப் பெயரிட்ட இப்பாடலை சான் ரோல்டன் இசையமைப்பில் ஆந்தோனி தாசன் இப்பாடலைப் பாடியுள்ளார்.