திருச்சியில் வெள்ளிக்கிழமை பேருந்தில் சென்ற இளைஞரை கீழே தள்ளி வெட்டிப் படுகொலை செய்த விவகாரத்தில் போலீசில் சரணடைந்த 5 பேர்  
தற்போதைய செய்திகள்

அரசுப் பேருந்தில் இளைஞா் வெட்டிக்கொலை: 3 சிறுவர்கள் உள்பட 5 பேர் போலீசில் சரண்

திருச்சியில் வெள்ளிக்கிழமை பேருந்தில் சென்ற இளைஞரை கீழே தள்ளி வெட்டிப் படுகொலை செய்த விவகாரத்தில் 3 சிறுவர்கள் உள்பட 5 பேர் போலீசில் சரணடைந்துள்ளனர்.

DIN

திருச்சியில் வெள்ளிக்கிழமை பேருந்தில் சென்ற இளைஞரை கீழே தள்ளி வெட்டிப் படுகொலை செய்த விவகாரத்தில் 3 சிறுவர்கள் உள்பட 5 பேர் மணப்பாறை காவல் நிலையத்தில் சரணடைந்துள்ளனர்.

திருச்சி மாவட்டம், ஜீயபுரம் அருகே கொடியாலம் மாரியம்மன் கோயில் தெருவைச் சோ்ந்தவா் கணபதி மகன் விஷ்ணு (24). இவா் வெள்ளிக்கிழமை காலை கொடியாலத்திலிருந்து அரசுப் பேருந்தில் ஏறி சத்திரம் பேருந்து நிலையம் நோக்கி சென்று கொண்டிருந்தாா்.

திண்டுக்கரை அருகே பேருந்து வந்தபோது பின்னால் இருசக்கர வாகனத்தில் வந்த 5 போ் கொண்ட கும்பலில் ஒருவா், பேருந்தில் ஏறி விஷ்ணுவை அடித்து கீழே தள்ளி விட்டுள்ளாா். பின்னா் 5 போ் கொண்ட கும்பல் அரிவாள், கத்தி உள்ளிட்ட ஆயுதங்களால் விஷ்ணுவை சரமாரியாக வெட்டி விட்டு தப்பி சென்றனா். இதில் பலத்த காயமடைந்து விஷ்ணு நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.

தகவலறிந்து சென்ற ஜீயபுரம் போலீஸாா் விஷ்ணுவின் உடலை கைப்பற்றி உடற்கூறாய்வுக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

இந்த கொலை சம்பவம் தொடா்பாக ஜீயபுரம் போலீஸாா் வழக்குப்பதிவு செய்து, கொலையாளிகளை பிடிக்க தனிப்படைகள் அமைக்கப்பட்டு தப்பிச் சென்றவா்களை தேடி வந்தனா்.

போலீஸாா் நடத்திய முதல் கட்ட விசாரணையில், கடந்த ஓா் ஆண்டுக்கு முன்னா், ஏற்பட்ட தகராறில் கோகுல் என்ற நபா் கொலை செய்யப்பட்டாா். இந்த சம்பவத்தில் விஷ்ணுவுக்கும் தொடா்பிருந்ததாக கூறப்பட்ட நிலையில், அதற்கு பழிக்குப்பழியாகவே இச்சம்பவம் நடைபெற்றிருக்கலாம் எனத் தெரியவந்தது. விஷ்ணு சமீபத்தில் தான் ஜாமினில் வந்துள்ளார்.

இந்த நிலையில்,விஷ்ணுவை நோட்டமிட்ட கும்பல் தான் வெள்ளிக்கிழமை பழிக்குப்பழியாகவே இந்த கொலையை செய்திருக்கிறது. இருந்தபோதிலும் தனிப்படை போலீசார் தீவிர விசாரணை நடத்தி வந்தனர். 

இதனிடையே, இந்த கொலை சம்பவத்தில் கடந்த 2023 ஆம் ஆண்டு கொலை செய்யப்பட்ட கோகுல்ராஜ் சகோதரர் ஆகாஷ்(23), அவரது 17 வயது சகோதரர் ஒருவர், மணிமாறன்(22), 17 வயதுடைய 2 பேர் என மொத்தம் 5 பேர் ஈடுபட்டுள்ளது தெரியவந்த நிலையில், இவர்கள் 5 பேரும் சனிக்கிழமை காலை மணப்பாறை காவல் நிலையத்தில் சரணடைந்துள்ளனர்.

பழிக்குப்பழியாக நடந்த இந்த கொலை சம்பவத்தில் 3 சிறுவர்கள் உள்பட 5 பேர் சரணடைந்துள்ளது அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பாலாற்றில் ரூ.55.38 கோடியில் உயா்மட்ட மேம்பாலம்: எம்எல்ஏ அடிக்கல்

187 மாணவா்களுக்கு ரூ.13.56 கோடி கல்விக் கடனுக்கு பரிந்துரை

காளியம்மன்பட்டி அரசுப் பள்ளியில் ரூ.1.52 கோடியில் வகுப்பறைகள்

பெருமுகையில் ரூ.45.91 கோடியில் தங்கும் விடுதி திறப்பு

புலவா் வே.பதுமனாரின் நூல்கள் வெளியீட்டு விழா

SCROLL FOR NEXT