கோப்புப்படம் 
தற்போதைய செய்திகள்

தொடர் கனமழை: நெல்லை மாவட்டத்தில் பள்ளிகளுக்கு விடுமுறை அளிப்பதை தலைமை ஆசிரியர்கள் முடிவெடிக்கலாம்

மாவட்டத்தில் உள்ள வியாழக்கிழமை(நவ.21) விடுமுறை அளிப்பது குறித்து அந்தந்த பள்ளியின் தலைமை ஆசிரியர்களே முடிவெடுக்கலாம்

DIN

திருநெல்வேலி மாவட்டத்தில் தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக, மாவட்டத்தில் உள்ள வியாழக்கிழமை(நவ.21) விடுமுறை அளிப்பது குறித்து அந்தந்த பள்ளியின் தலைமை ஆசிரியர்களே முடிவெடுக்கலாம் என மாவட்ட கல்வி அலுவர் சிவக்குமார் தெரிவித்துள்ளார்.

கடந்த சில நாள்களாக தென் மாவட்டங்களில் வடகிழக்குப் பருவமழை தீவிரமடைந்து, மேற்குத் தொடா்ச்சி மலையின் நீா்ப்பிடிப்புப் பகுதிகளில் தொடா் கனமழை பெய்து வருகிறது.

மேலும், மாஞ்சோலை, காக்காச்சி, நாலுமுக்கு, ஊத்து உள்ளிட்ட தேயிலைத் தோட்ட வனப்பகுதிகளிலும் பலத்த மழைபெய்து வருவதால் மணிமுத்தாறு அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

இதையடுத்து, வியாழக்கிழமை (நவ. 21) முதல் மணிமுத்தாறு அருவியில் சுற்றுலாப் பயணிகள் குளிப்பதற்கு வனத் துறை தடை விதித்தது.இதனால் சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றமடைந்தனா். அருவியை பாா்வையிட மட்டும் அனுமதிக்கப்படுகின்றனா்.

இந்த நிலையில், தொடர் கனமழை காரணமாக திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு வியாழக்கிழமை(நவ.21) விடுமுறை அளிப்பது குறித்து அந்தந்த பள்ளியின் தலைமை ஆசிரியர்கள் முடிவெடுக்கலாம் என மாவட்ட கல்வி அலுவலர் சிவக்குமார் கூறியுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வியப்பில் ஆழ்த்திய கிறிஸ்டோஃபர் நோலனின் ஒடிசி முன்னோட்டம்!

மோசமான ஃபார்மிலிருந்து கண்டிப்பாக மீண்டு வருவேன்: சூர்யகுமார் யாதவ்

தரையிறங்க முடியாமல் திரும்பிய மோடியின் ஹெலிகாப்டர்! | செய்திகள்: சில வரிகளில் | 20.12.25

நாளை (டிச.21) திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்

எஸ்ஐஆர் எதற்காக..? - பிரதமர் மோடி விளக்கம்!

SCROLL FOR NEXT