வலது புறத்தில் அன்மோல் பிஷ்னோய், இடது புறத்தில் லாரன்ஸ் பிஷ்னோய். படம்: ANI
தற்போதைய செய்திகள்

லாரன்ஸ் பிஷ்னோய் தம்பி அயோவா சிறையில் அடைப்பு!

அன்மோல் பிஷ்னோய் அயோவாவில் உள்ள சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

DIN

அமெரிக்கா சட்ட அமலாக்கத்துறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்ட தாதா லாரன்ஸ் பிஷ்னோயின் தம்பி அன்மோல் பிஷ்னோய், தற்போது அயோவாவில் உள்ள சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

அயோவாவில் உள்ள பொட்டவட்டமி கவுண்டி சிறையில் அன்மோல் அடைக்கப்பட்டுள்ளதாக அமெரிக்க குடியேற்றம் மற்றும் சுங்க அமலாக்கத்துறை இணையதளத்தில் தகவல் வெளியிடப்பட்டுள்ளது. இது தொடர்பான மற்ற விவரங்கள் ஏதும் தெரிவிக்கப்படவில்லை.

குஜராத் மாநிலம் சபா்மதி பகுதியில் உள்ள சிறையில் அடைக்கப்பட்டுள்ள லாரன்ஸ் பிஷ்னோய், சிறையில் இருந்து சர்வதேச அளவில் குற்றச்செயலில் ஈடுபடுபவராக அறியப்படுகிறார்.

கடந்த ஏப்.14-ஆம் தேதி மகாராஷ்டிர மாநிலம் மும்பை பாந்த்ரா பகுதியில் ஹிந்தி நடிகா் சல்மான் கான் வீட்டுக்கு வெளியே துப்பாக்கிச்சூடு நடைபெற்றது.

இந்தத் துப்பாக்கிச்சூட்டுக்கு தாமே காரணம் என்று தாதா லாரன்ஸ் பிஷ்னோயின் தம்பி அன்மோல் பிஷ்னோய் தெரிவித்தாா். சல்மானை கானை கொல்ல அந்தத் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டதாகக் கூறப்படுகிறது.

இதைத்தொடா்ந்து கடந்த அக்.12-ஆம் தேதி பாந்த்ராவில் மாநில முன்னாள் அமைச்சரும், தேசியவாத காங்கிரஸ் பிரமுகருமான பாபா சித்திக் சுட்டுக்கொல்லப்பட்டாா். அவரின் கொலைக்கு முழு பொறுப்பேற்பதாக லாரன்ஸ் பிஷ்னோய் கும்பல் முகநூல் பக்கத்தில் பதிவிட்டது.

இந்த குற்றங்கள் உள்பட மேலும் சில குற்ற வழக்குகளில் அன்மோல் பிஷ்னோய் குற்றவாளியாக சோ்க்கப்பட்டுள்ளார்.

அவா் அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் பதுங்கியிருப்பதாக மும்பை காவல்துறையினர் தகவல் வெளியிட்ட நிலையில், அமெரிக்க காவல்துறையும் அதனை உறுதி செய்திருந்தது.

இதனைத் தொடர்ந்து, அன்மோலுக்கு எதிராக ரெட் நோட்டீஸை இன்டர்போல் வெளியிட்டிருந்தது.

ஃப்ரெஸ்னோ நகரில் இருந்த அன்மோலை அமெரிக்க காவல்துறையினர் கடந்த வாரம் கைது செய்யப்பட்டதாக இந்திய அதிகாரி ஒருவர் தெரிவித்து இருந்த நிலையில், தற்போது அவர் அயோவாவில் உள்ள பொட்டவட்டமி கவுண்டி சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தேசிய தொழிலநுட்பக் கல்லூரியில் வேலை: உடனே விண்ணப்பிக்கவும்!

மத்திய அமைச்சர் Rajnath Singh சிங்குடன் விண்வெளி நாயகன் Subhanshu Shukla!

லவ் இன்ஸுரன்ஸ் கம்பெனி வெளியீட்டுத் தேதி!

தவெக மாநாடு: தொண்டர்கள் 10 பேர் மருத்துவமனையில் அனுமதி!

காஷ்மீரில் மிதமான நிலநடுக்கம்!

SCROLL FOR NEXT