இரு குழந்தைகளுடன் கிணற்றில் குதித்து கர்ப்பிணி தற்கொலை. 
தற்போதைய செய்திகள்

குடும்பத் தகராறு: இரு குழந்தைகளுடன் கிணற்றில் குதித்து கர்ப்பிணி தற்கொலை!

கர்ப்பிணிப்பெண் இரண்டு குழந்தைகளுடன் தற்கொலை.

DIN

வாழப்பாடி: சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே நெய்யமலை அக்கரைப்பட்டி கிராமத்தில் குடும்பத்தகராறில் மனம் உடைந்த கர்ப்பிணிப்பெண், தனது இரு பெண் குழந்தைகளுடன் கிணற்றில் குதித்துத் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் கிராம மக்கள் இடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

வாழப்பாடி அடுத்த இடையப்பட்டி ஊராட்சி நெய்யமலை அக்கரைப்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் கூலித் தொழிலாளி ரவி(35). இவரது மனைவி மாதம்மாள்(30). இத்தம்பதியருக்கு மனோரஞ்சனி(7), நித்தீஸ்வரி(3), என்ற இரு பெண் குழந்தைகள் உள்ளனர்.

மாதம்மாள் தற்போது கருவுற்று இருப்பதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், கணவன், மனைவிக்கிடையே அடிக்கடி குடும்பத்தில் தகராறு ஏற்பட்டு வந்ததால், கோபித்துக் கொண்டு பெற்றோர் வீட்டிற்கு சென்று இருந்த மாதம்மாள், கடந்த வாரம் தான் கணவன் வீட்டிற்கு வந்ததாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில், கடந்த 23ஆம் தேதி கணவன், மனைவிக்கிடையே மீண்டும் தகராறு ஏற்பட்டதால் மனமுடைந்த மாதம்மாள், தனது இரு குழந்தைகளுடன் மாயமானார். வேலைக்கு சென்று இருந்த ரவி வீட்டுக்கு வந்து பார்த்தபோது தனது மனைவி மற்றும் இரு குழந்தைகளை காணவில்லை.

அக்கம் பக்கத்தில் தேடியும் கண்டுபிடிக்கவில்லை. இந்நிலையில், இன்று(நவ. 26) அதிகாலை அவரது விவசாயத் தோட்டத்தில் உள்ள கிணற்றில் இவரது மனைவி மாதம்மாளும், குழந்தைகள் மனோரஞ்சனி, நித்தீஸ்வரி ஆகிய மூவரும் சடலமாக மிதந்துள்ளனர்.

இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த ரவி இது குறித்து ஏத்தாப்பூர் போலீஸாருக்கு தகவல் தெரிவித்துள்ளார். தகவல் அறிந்த ஏத்தாப்பூர் போலீஸார் சம்பவ இடத்திற்கு சென்று, மூவரது உடலையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து விவசாயி ரவி மற்றும் அவரது குடும்பத்தினரிடம் ஏத்தாப்பூர் போலீஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். குடும்பத்தகராறில் மணமடைந்த கர்ப்பிணிப் பெண் இரு குழந்தைகளுடன் கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் இப்பகுதி மக்களிடையே பரபரப்பையும், சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது.

சோகம்!

தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்த மாதம்மாள், தனது மூத்த மகள் மனோரஞ்சனியை முதலில் கிணற்றில் குதிக்க செய்த பிறகு, மூன்று வயது பெண் குழந்தை நித்தீஷ்வரியை தனது இடுப்பில் சேலையில் கட்டிக்கொண்டு கிணற்றில் குதித்துள்ளார். இன்று காலை மாதம்மாளின் இடுப்பில் இருந்தபடியே குழந்தை சடலம் மீட்கப்பட்டது சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ரூ.1.92 கோடி மதிப்பீட்டில் வளா்ச்சிப் பணிகள்: கணபதி ப.ராஜ்குமாா் எம்.பி. தொடங்கிவைத்தாா்

போக்குவரத்து துண்டிப்பால் ஒரு மாதமாக பள்ளிக்குச் செல்ல முடியாமல் பழங்குடி குழந்தைகள் தவிப்பு

மீன் வளத் துறை உதவி இயக்குநா் அலுவலகத்தை மீனவா்கள் முற்றுகை

இளைஞா்களை ‘ரீல்ஸ்’-க்கு அடிமையாக்குவதே பிரதமரின் விருப்பம்- ராகுல் காந்தி குற்றச்சாட்டு

சபரிமலை: பூஜை, தங்குமிட முன்பதிவு இன்று தொடக்கம்

SCROLL FOR NEXT