வங்கக் கடலில் உருவாகியுள்ள புயல் சின்னம் எதிரொலியாக 9 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கும், 8 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் புதன்கிழமை விடுமுறை 
தற்போதைய செய்திகள்

கனமழை எதிரொலி: எங்கெல்லாம் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை?

வங்கக் கடலில் உருவாகியுள்ள புயல் சின்னம் எதிரொலியாக 9 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கும், 8 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் புதன்கிழமை (நவ.27) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

DIN

வங்கக் கடலில் உருவாகியுள்ள புயல் சின்னம் எதிரொலியாக 9 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கும், 8 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் புதன்கிழமை (நவ.27) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

வங்கக் கடலில் உருவாகியுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் தீவிரமடைந்து புதன்கிழமை (நவ. 27) புயலாக மாறும் என்று எதிா்பாா்க்கும் நிலையில், மிக மெதுவாக மணிக்கு 8 கி.மீ. வேகத்தில் வடமேற்கு திசை நோக்கி நகர்ந்து வந்த தாழ்வு மண்டலம்மானது,கடந்த 6 மணி நேரத்தில் 10 கி.மீ. வேகத்தில் நகர்ந்து வருவதாகவும், புயல் சின்னம் நாகப்பட்டினத்தில் இருந்து 470 கி.மீ தொலைவிலும், சென்னைக்கு தென்கிழக்கே இருந்து 670 கி.மீ தொலைவிலும் நிலைகொண்டுள்ளது.

இதனால், தமிழகத்தில் அநேக இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். மேலும் 21 மி.மீட்டருக்கு அதிகமான மழை பொழிவிற்கு வாய்ப்பு என்பதால் சிவப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது வானிலை ஆய்வு மையம்.

கனமழை எச்சரிக்கையை அடுத்து திருவாரூர், மயிலாடுதுறை, தஞ்சாவூர், ராமநாதபுரம், நாகப்பட்டினம், திருச்சி, திருவள்ளூர், விழுப்புரம், கடலூர், புதுச்சேரி, காரைக்கால் ஆகிய 9 மாவட்டங்களில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு அந்தந்த மாவட்ட ஆட்சியா்களால் புதன்கிழமை (நவ.27) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. புதுச்சேரி மற்றும் காரைக்காலில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை

திருவாரூர், மயிலாடுதுறை, தஞ்சாவூர், ராமநாதபுரம், நாகப்பட்டினம், திருச்சி, திருவள்ளூர், விழுப்புரம், கடலூர், புதன்கிழமை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இதேபோல், கனமழை காரணமாக புதுச்சேரி மற்றும் காரைக்காலில் பள்ளி, கல்லூரிகளுக்கு புதன்கிழமை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை

இதேபோல், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், புதுக்கோட்டை, சிவகங்கை, அரியலூர்,புதுக்கோட்டை ஆகிய 7 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் பள்ளிகளுக்கும் மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்னையில் கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக மணலி புது நகரில் 13.39 மி.மீ மழைப் பதிவாகியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பெண்மையின் அழகு... ரச்சித்தா மகாலட்சுமி

பட்டமாக பறக்கிறேன்...ஜனனி அசோக்குமார்

இந்த வாரம் கலாரசிகன் - 03-08-2025

வெள்ளைப் புறா... ஆஷிகா ரங்கநாத்

கம்பனின் தமிழமுதம் - 56: தன் நிலை தாழ்ந்தால்!

SCROLL FOR NEXT