சாலையில் கிடந்த பணத்தை நோ்மையாக போலீசார் மூலம் உரியவரிடம் ஒப்படைத்த தேவம்பாடி வலசு பகுதியைச் சேர்ந்த சந்தோஷ்குமார். 
தற்போதைய செய்திகள்

சாலையில் கிடந்த ரூ.2.50 லட்சம்: உரியவரிடம் ஒப்படைத்த இளைஞருக்கு குவியும் பாராட்டுகள்!

பொள்ளாச்சி அருகே சாலையோரம் கேட்பாரற்றுக் கிடந்த ரூ.2.50 லட்சத்தை போலீசார் மூலம் உரியவரிடம் ஒப்படைத்த இளைஞருக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது.

DIN

கோவை: பொள்ளாச்சி அருகே சாலையோரம் கேட்பாரற்றுக் கிடந்த ரூ.2.50 லட்சத்தை போலீசார் மூலம் உரியவரிடம் ஒப்படைத்த இளைஞருக்கு பொதுமக்கள் மற்றும் சமூக ஆா்வலா்களிடம் இருந்து பாராட்டுகள் குவிந்து வருகிறது.

பொள்ளாச்சியை அடுத்த தேவம்பாடி வலசு பகுதியைச் சேர்ந்தவர் சந்தோஷ்குமார்(25). தனியார் நிறுவன ஊழியரான சந்தோஷ் குமார் வெள்ளிக்கிழமை வழக்கம்போல் தனது ஊரிலிருந்து பணி நிமித்தமாக பொள்ளாச்சிக்கு சென்றுள்ளார்.அப்போது ஜமீன் முத்தூர் தனியார் பள்ளி அருகே சாலையோரம் கேட்பாரற்ற நிலையில் செய்தித்தாளில் சுற்றப்பட்ட நிலையில் ரூ.2.50 லட்சம் பணம் இருந்தது தெரியவந்தது.

இதையடுத்து அந்த பணத்தை இளைஞர் சந்தோஷ் குமார் பத்திரமாக எடுத்து வந்து, அந்த பகுதியில் உள்ள மேற்கு காவல் நிலைய அதிகாரிகளிடம் ஒப்படைத்தார். செய்தித்தாளில் கட்டப்பட்டிருந்தை பிரித்து பார்த்தபோது அதில் ரூ.500 கொண்ட 5 கட்டு இருந்தது. அதாவது ரூ.2.50 லட்சம் இருந்தது.

இதனைத் தொடர்ந்து பணத்தைத் தவறவிட்டவர் குறித்து காவல் அதிகாரிகள் விசாரணை நடத்தி வந்தனர்.

இந்த நிலையில், பணத்தைத் தவறவிட்டவர் காளிபாளையத்தைச் சேர்ந்த ஈஸ்வரமூர்த்தி என்பது தெரிய வந்தது. இதையடுத்து காவல்துறை அதிகாரிகள் சந்தோஷ் குமார் மூலம் ரூ.2.50 லட்சத்தை தவறவிட்ட காளிபாளையம் பகுதியைச் சேர்ந்த ஈஸ்வர மூர்த்தி என்பவரிடம் ஒப்படைத்தனர்.

பொள்ளாச்சி அடுத்த கிராமப் பகுதியில் வசிக்கும் நடுத்தர குடும்பத்தைச் சேர்ந்த சந்தோஷ் குமார், சாலையில் கிடந்த பணத்தை நோ்மையாக போலீசார் மூலம் உரியவரிடம் ஒப்படைத்தது அந்த பகுதி மக்களிடையே நெகழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்த நிலையில் கீழே கிடந்த பணத்தை நோ்மையாக ஒப்படைத்த சந்தோஷ் குமாருக்கு பொதுமக்கள் மற்றும் சமூக ஆா்வலா்களிடம் இருந்து பாராட்டுகள் குவிந்து வருகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

விபத்தில் காயமடைந்த நபா் உயிரிழப்பு

நீட்தோ்வில் வெற்றி பெற்ற மலைக் கிராம மாணவா்!

அறிவுசாா்ந்த இளம் தலைமுறையினா் அரசியலில் வெற்றிடம் ஏற்பட விடக்கூடாது: உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி இப்ராஹிம் கலிபுல்லா

திருவண்ணாமலையில் நாளை தேசிய கைத்தறி தினவிழா

கொடைக்கானலில் அனுமதியின்றி கட்டப்படும் அடுக்குமாடிக் கட்டடங்கள்!

SCROLL FOR NEXT