காந்தி நினைவிடத்தில் குடியரசுத் தலைவர், தலைவர்கள் மரியாதை!
மகாத்மா காந்தியின் பிறந்தநாளையொட்டி அவரது நினைவிடத்தில் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்டோர் மரியாதை செலுத்தினர்.
மகாத்மா காந்தியின் பிறந்தநாளையொட்டி அவரது நினைவிடத்தில் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, பிரதமர் நரேந்திர மோடி மற்றும் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்டோர் மரியாதை செலுத்தினர்.
மகாத்மா காந்தியின் பிறந்தநாளான 'காந்தி ஜெயந்தி' இன்று நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது.
இதையொட்டி, தில்லி ராஜ்காட்டில் உள்ள மகாத்மா காந்தியின் நினைவிடத்தில் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, குடியரசுத் துணைத் தலைவர் ஜக்தீப் தன்கர், பிரதமர் நரேந்திர மோடி, மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா, மற்றும் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, தில்லி துணை நிலை ஆளுநா் வி.கே. சக்சேனா, தில்லி முதல்வர் அதிஷி, மத்திய அமைச்சர்கள் பலரும் காந்திக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.