நிமேஷிகா ராதாகிருஷ்ணன் 
தற்போதைய செய்திகள்

கண்ணான கண்ணே சீரியல் நாயகியின் புதிய தொடர்!

நடிகை நிமேஷிகாவின் புதிய தொடர் அறிவிப்பு...

DIN

கண்ணான கண்ணே சீரியலில் நடித்த நாயகி நிமேஷிகாவின் புதிய தொடர் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் தொடர்களே டிஆர்பியில் முன்னணியில் உள்ளன. அந்தவகையில், தொடர்கள் விறுவிறுப்புடனும், வித்தியமான கதைக்களத்துடன் எடுக்கப்பட்டு வருகின்றன.

சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான கண்ணான கண்ணே தொடரில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் நிமேஷிகா ராதாகிருஷ்ணன். ஆரம்பத்தில் தொகுப்பாளராக இருந்த இவர், விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான கடைக்குட்டி சிங்கம் தொடரில் நடித்து சின்னத்திரைக்குள் நுழைந்தார்.

நடிகை நிமேஷிகா, கண்ணான கண்ணே தொடரில் நடித்து தனக்கென தனி ரசிகர்கள் பட்டாளத்தை உருவாக்கினார். தற்போது நிமேஷிகா, சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகவுள்ள புனிதா என்ற புதிய தொடரில் நடிக்கிறார்.

புனிதா தொடர் அம்மா - வளர்ப்பு மகள் பாசத்தை பிரதானப்படுத்தி எடுக்கப்படுவதாகத் தெரிகிறது. இத்தொடரின் முன்னோட்டக் காட்சி(ப்ரோமோ) வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது.

தற்போது, சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் இனியா, மலர், சுந்தரி உள்ளிட்ட தொடர்கள் நிறைவடையவுள்ளதாக தகவல் வெளியான நிலையில், புதிய தொடர் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

மேலும், புனிதா தொடர் தொடங்கப்படும் தேதி, ஒளிபரப்பு நேரம் குறித்த தகவல்கள் விரைவில் வெளியாகும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அழகும் அமுதும்! - ஜெனிலியா

அழகிய நதி... மாளவிகா மோகனன்!

குடியரசு துணைத் தலைவர் தேர்தல்: சுதர்ஷன் ரெட்டிக்கு கம்யூனிஸ்ட் கட்சிகள் முழு ஆதரவு!

கடலுக்கு அடியில் வெளியிடப்பட்ட திரௌபதி - 2 முதல் பார்வை!

ஜம்மு - காஷ்மீர் தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து நிறுத்தம்!

SCROLL FOR NEXT