அனாமிகா தொடர். 
தற்போதைய செய்திகள்

திகில் தொடரின் ஒளிபரப்பு நேரம் மாற்றம்! என்ன காரணம்?

அனாமிகா தொடர் நிறுத்தம் தொடர்பாக...

DIN

சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் அனாமிகா தொடரின் ஒளிபரப்பு நேரம் மாற்றப்படுவதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

தமிழ்த் தொலைக்காட்சி தொடர்களில் திரில்லர் தொடர்கள் அவ்வபோது ஒளிபரப்பாகி மக்களைக் கவரும். அந்தவகையில், நீண்ட காலத்திற்குப் பிறகு அனாமிகா என்ற திகில் தொடர் ஒளிபரப்பாகி வந்தது.

இத்தொடரின் முன்னோட்ட விடியோ வெளியாகி 8 மாதங்களுக்குப் பிறகுதான் இத்தொடர் ஆரம்பிக்கப்பட்டது. அனாமிகா தொடர் மலையாளத்தில் இருந்து, தமிழில் டப் செய்யப்பட்டு ஒளிபரப்பு செய்யப்பட்டது.

அதேபோல், தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு, பெங்காலி மொழிகளிலும் டப் செய்யப்பட்டு ஒளிபரப்பு செய்யப்படுகிறது.

இத்தொடரில் அக்‌ஷதா தேஷ்பாண்டே, தர்ஷக் கெளடா, ஆகாஷ் பிரேம் குமார் ஆகியோர் பிரதான பாத்திரத்தில் நடிக்கிறார்கள். கடந்த மே மாதம் முதல் இத்தொடர் ஞாயிற்றுக்கிழமைகளில் பிற்பகல் 2 மணிக்கு ஒளிபரப்பாகி வந்தது.

இதனிடையே, கடந்த வாரம் டாப் குக்கு டூப் குக்கு இறுதி நிகழ்ச்சி ஒளிபரப்பு செய்யப்பட்டதால், அனாமிகா தொடர் ஒளிபரப்பாகவில்லை, இதனைத் தொடர்ந்து இந்த வாரம் பிற்பகல் 2 மணிக்கு நாங்க ரெடி, நீங்க ரெடியா நிகழ்ச்சி ஒளிபரப்பாகவுள்ளது.

இந்த நிலையில், அனாமிகா தொடரின் இந்த வாரத்துக்கான முன்னோட்டக் காட்சி ஏதும் இதுவரை வெளியாகாததால், இத்தொடர் நிறுத்தப்பட்டதாகக் கூறப்பட்ட நிலையில், தொடரின் ஒளிபரப்பு நேரம் மாற்றப்பட்டு இருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இது தொடர்பான அதிகாரப்பூர்வ தகவல் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

நெல்லையில் இதுவரை 150 போ் குண்டா் சட்டத்தில் கைது

சாலையில் வெளியேறும் பாதாள சாக்கடை கழிவுநீா்: மக்கள் அவதி

சுமை வாகனத்தில் அதிக கன்றுகுட்டிகளை ஏற்றி வந்த இருவா் கைது

வண்ணாா்பேட்டையில் முன்னாள் மேயா் போராட்டம்

மழைநீா் வடிகால் ஓடைகள் தூா்வாரும் பணி தீவிரம்

SCROLL FOR NEXT