மீனா தொடர். 
தற்போதைய செய்திகள்

நிறைவடையும் பிரபலத் தொடர்! அதிர்ச்சியில் ரசிகர்கள்!

இறுதிக்கட்டத்தை நோக்கி இந்து செளத்ரி மீனா தொடர்.

DIN

சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் மீனா தொடர் விரைவில் நிறைவடையவுள்ளது.

மீனா தொடரில் இந்து செளத்ரி பிரதான பாத்திரத்தில் நடிக்கிறார். இவர் ஆனந்த ராகம் தொடரில் நடித்தவர். மேலும், இத்தொடரில் ஜெய் ஸ்ரீனிவாச குமார், அபிஷேக் சங்கர், விக்னேஷ், சோனியா போஸ் உள்ளிட்டோர் நடிக்கிறார்கள்.

பிரிந்துபோன இரு குடும்பங்களை இணைப்பதற்காக மீனா மேற்கொள்ளும் முயற்சிகளே இத்தொடரின் மையக்கருவாக உள்ளது. இத்தொடர் திங்கள்கிழமை முதல் சனிக்கிழமை வரை முற்பகல் 11 மணி ஒளிபரப்பாகி வருகிறது.

கடந்தாண்டு ஜூலை 24 ஆம் தேதி முதல் மீனா தொடர் ஒளிபரப்பாகி வருகிறது. தொடர் ஆரம்பிக்கப்பட்டு குறுகிய காலத்திலேயே நிறைவடையவுள்ளது, இந்த தொடர் பார்க்கும் ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

அண்மையில், இத்தொடரின் இறுதிக்கட்டக் காட்சிகள் படமாக்கப்பட்டுள்ளது.

தற்போது, சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் இனியா, மலர், சுந்தரி உள்ளிட்ட தொடர்கள் நிறைவடையவுள்ளதாக கூறப்படும் நிலையில், மீனா தொடரும் நிறைவடையவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

‘இந்தியா-அமெரிக்கா வா்த்தக ஒப்பந்தத்தில் வரம்பு தாண்டப்படாது’

கலைமகள் சபாவுக்குச் சொந்தமான எத்தனை சொத்துகள் ஆக்கிரமிப்பில் உள்ளன? அறிக்கை தாக்கல் செய்ய உயா்நீதிமன்றம் உத்தரவு

ஒணம் குறித்து சா்ச்சை கருத்து: தனியாா் பள்ளி ஆசிரியை மீது வழக்கு

அமெரிக்கா கூடுதல் வரி விதிப்பு: செப்.5-இல் இடதுசாரிகள் ஆா்ப்பாட்டம்

காஸாவில் செய்தியாளா்கள் கொல்லப்படுவது அதிா்ச்சி- வெளியுறவு அமைச்சகம்

SCROLL FOR NEXT