முகப்பு
தற்போதைய செய்திகள்

தங்கம் விலை குறைவு: இன்றைய நிலவரம்!

சென்னையில் ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு ரு. 160 குறைவு.

Updated On : 7 அக்டோபர், 2024 at 5:32 AM
தங்கம் (கோப்புப்படம்)
பகிர்:

தங்கம் விலை தொடர்ந்து அதிகரித்து வந்த நிலையில், இன்று(அக். 7) சவரனுக்கு ரூ. 160 குறைந்துள்ளது.

கடந்த வாரம், தொடர்ந்து அதிகரித்துவந்த தங்கத்தின் விலை புதிய உச்சத்தை அடைந்து, மக்களை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது.

இந்த வாரத் தொடக்க நாளான இன்று, சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை ஒரு சவரனுக்கு ரூ. 160 குறைந்து ரூ. 56,800-க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல், கிராமுக்கு ரூ. 20 குறைந்து ரூ. 7,100-க்கு விற்பனையாகிறது.

இதனிடையே, வெள்ளியின் விலை மாற்றமின்றி, ஒரு கிராம் ரூ. 103-க்கும், ஒரு கிலோ கட்டி வெள்ளியின் விலை ரூ. 1,03,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

முழு கட்டுரையைப் படிக்க →