தங்கம் விலை குறைவு! இன்றைய நிலவரம்!
இன்றைய தங்கம், வெள்ளி விலை நிலவரம் தொடர்பாக...
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை செவ்வாய்க்கிழமை சவரனுக்கு ரூ.960 குறைந்து ரூ.1 லட்சத்து 14,560-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
தங்கம் விலை கடந்த சில நாள்களாக திடீர் ஏற்ற, இறக்கமாக இருந்து வருகிறது.
கடந்த பிப்.14-இல் தங்கம் விலை சவரனுக்கு ரூ.1,280 உயர்ந்து ரூ.1 லட்சத்து 16 ஆயிரத்து 480-க்கு விற்பனையானது.
Advertisement
Advertisement
தொடர்ந்து, திங்கள்கிழமை தங்கம் விலை சவரனுக்கு ரூ.960 குறைந்து ரூ.1 லட்சத்து 15 ஆயிரத்து 520-க்கும் விற்பனையானது.
இந்த நிலையில், சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை செவ்வாய்க்கிழமை கிராமுக்கு ரூ.120 குறைந்து ஒரு கிராம் ரூ.14,320-க்கும், சவரனுக்கு ரூ.960 குறைந்து ஒரு சவரன் ரூ.1 லட்சத்து 14,560-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
வெள்ளி விலையில் மாற்றமின்றி ஒரு கிராம் ரூ. 265-க்கும், ஒரு கிலோ (கட்டி வெள்ளி) ரூ.2.65 லட்சத்துக்கும் விற்பனையாகிறது.
The price of gold jewelry in Chennai fell by Rs. 960 per sovereign on Tuesday and is being sold at Rs. 1 lakh 14,560.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.