தங்கம் விலை குறைவு: இன்றைய நிலவரம்! (நவ. 10)
இன்றைய தங்கம், வெள்ளி நிலவரம் தொடர்பாக...
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை செவ்வாய்க்கிழமை (நவ. 10) சவரனுக்கு ரூ. 360 குறைந்து, ரூ. 1,05,680-க்கு விற்பனையாகிறது.
சர்வதேச பொருளாதார மற்றும் அரசியல் சூழல், கச்சா எண்ணெய் விலை, அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு, தங்கத்தின் மீதான முதலீடு, உலக பங்குச்சந்தை செயல்பாடு உள்ளிட்ட பல்வேறு காரணங்களின் அடிப்படையில் தங்கத்தின் விலை நிர்ணயிக்கப்படுகிறது.
உலக அளவில் தங்கத்தை இறக்குமதி செய்யும் நாடுகளில் இந்தியா முன்னணியில் உள்ளது. அமெரிக்கா - ஈரான் இடையிலான மோதலின் தாக்கம், உலக பொருளாதாரத்தில் எதிரொலித்து வருகிறது. அது சர்வதேச அளவில் தங்கம் விலையிலும் தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது.
Advertisement
Advertisement
இதனிடையே, தங்கத்தின் விலை கடந்த சனிக்கிழமை (நவ. 7) சவரனுக்கு ரூ. 160 உயர்ந்தது. கடந்த வாரத்தில் தங்கம் விலை ஏற்ற இறக்கத்துடன் இருந்த நிலையில், திங்கள்கிழமை காலை வர்த்தகம் தொடங்கியதும் கிராமுக்கு ரூ. 95 உயர்ந்து, ரூ. 13,255-க்கும், சவரனுக்கு ரூ. 760 உயர்ந்து, ரூ. 1,06,040-க்கும் விற்பனையாகிறது.
இந்த நிலையில், சென்னையில் ஆபரணத் தங்கம் விலை செவ்வாய்க்கிழமை (நவ. 10) சவரனுக்கு ரூ. 360 குறைந்து, ஒரு சவரன் ரூ. 1,05,680-க்கும் கிராமுக்கு ரூ. 45 உயர்ந்து ஒரு கிராம் ரூ. 13,210-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
வெள்ளி விலையைப் பொருத்தவரை மாற்றமின்றி ஒரு கிராம் ரூ. 205-க்கும், ஒரு கிலோ (கட்டி வெள்ளி) ரூ. 2,05,000-க்கும் விற்பனையாகிறது.